தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

கருணாநிதியின் குரலைக்கேட்க தமிழகம் தவிக்கிறது? ஸ்டாலின்

1448354774-3859-450x263”தி.மு.க., தலைவர் கருணாநிதி நலம் பெற்று, அவர் குரல் சட்ட சபையில் ஒலிக்கும் நாளுக்காக தமிழகம் காத்திருக்கிறது,” என, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

தி.மு.க., தலைவர் கருணாநிதி, சட்ட சபையில், அடியெடுத்து வைத்து, 60 ஆண்டு நிறைவு பெறுகிற தருணம் இது. சட்டசபை தேர்தல் களத்தில், 13 முறை போட்டியிட்டவர்; 13 முறையும் வெற்றியைத் தவிர, வேறெதையும் எதிர்கொள்ளாதவர். குளித்தலை தொகுதியில், முதல் தேர்தலில் வென்ற கருணாநிதி, 1957 ஏப்ரல், 1ல், சட்டசபையில் பதவியேற்பு உறுதிமொழி ஏற்றார். இதுவரை, அவர் சந்தித்த அனைத்துத் தேர்தல்களிலும், வெற்றி பெற்ற சாதனையாளர்.

இப்போது, சட்டசபை நிகழ்வுகளில் பங்கேற்க முடியாமல் இருந்தாலும், 60 ஆண்டு கால சட்டசபை வரலாற்றில், அவர் செயல்பட்ட விதமும், தனித்துவமும், தி.மு.க., – எம்.எல்.ஏ.,க்களுக்கு, இன்றைக்கும் வழி காட்டுகிறது. கருணாநிதி விரைந்து நலம் பெற்று, மீண்டும் அவர் குரல் ஒலிக்கும் நாளுக்காக, தமிழகம் காத்திருக்கிறது. இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

Comments
Loading...