Designed by Iniyas LTD
யாழ்-புன்னாலையில் ஸ்ரீ இராணுவ வாகனம் மோதி இளைஞன் படுகாயம்!
மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞனை அவரின் பின்னால் சென்ற இராணுவ கப் ரக வாகனம் மோதியதில் அவரது கால் முறிந்தது. முறிந்த எலும்பின் ஒரு பகுதி வீதியில் காணப்பட்ட நிலையில், இளைஞன் உடனடியாக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.இந்தச் சம்பவம் புன்னாலைக் கட்டுவனில் நேற்றுக் காலை இடம்பெற்றது. புன்னாலைக்கட்டுவன் தெற்கைச் சேர்ந்த நாகராசா- பயூரதன் (வயது -19) என்பவரே விபத்தில் படுகாயமடைந்தார்.
குறித்த விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
தொடர்புடைய பதிவு
யாழ்ப்பாணம் பலாலி வீதியில் உரும்பிராய் திசையில் இருந்து பலாலி நோக்கி குறித்த இளைஞன் மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளார். அதேபோன்று பலாலி நோக்கி இராணுவ கப் ரக வாகனம் பயணித்துள்ளது. இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் வீதியின் எதிர்ப்பக்கம் திரும்பியவேளை இராணுவ வாகனம் மோட்டார் சைக்கிளை மோதித் தள்ளி இழுத்துச் சென்றுள்ளது.
இதனால் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞனின் வலது கால் முழுமையாக முறிந்ததோடு கையிலும் பலத்த காயம் ஏற்பட்டது. முறித்த கால் எலும்பு வீதியில் கிடந்தது. இதனால் காயமடைந்த இளைஞன் உடனடியாக வீதியால் பயணித்த முச்சக்கர வண்டியின் உதவியுடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.
விபத்து தொடர்பில் சுன்னாகம் ஸ்ரீ பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்டதையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் மேலதிக விசாரணையில் ஈடுபட்டனர். பின்னர் விபத்தில் சிக்கிய வாகனங்களைப் பொலிஸார் கொண்டு சென்றதோடு, இராணுவ வாகனச் சாரதியையும் அழைத்துச் சென்றனர்.