Designed by Iniyas LTD
இரா.கி நகர் இடைத்தேர்தல் தொடர்பில் சீமான் எழுச்சியுரை!
நடைபெறவிருக்கும் இராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்ற இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக கா.கலைக்கோட்டுதயம் அவர்கள் “மெழுகுவர்த்திகள்” சின்னத்தில் போட்டியிடுகிறார்.
இடைத்தேர்தலில் வென்று புதிய மாற்றத்தை உருவாக்கும் நோக்கில் நாம் தமிழர் கட்சியினர் தீவிரமாக தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் தொடர்ந்து இரண்டாம் நாளாக 02-04-2017 (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணியளவிலும் மாலை 4 மணியளவிலும், இராதாகிருஷ்ணன் நகர் தொகுதியின் 39 வது வட்டத்தில் வீடு வீடாக சென்று பொதுமக்களை நேரில் சந்தித்து வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.
அதனைத்தொடர்ந்து இரவு 7 மணிக்கு, சுங்கச்சாவடி, எம்.ஜி.ஆர் சாலை அருகே சீமான் தலைமையில் தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.