தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

நீர்கொழும்பில் வெடி விபத்து! இருவர் பலி

fire-accident-in-sivakasi-building-collapsedநீர்கொழும்பு, கிம்புலாப்பிட்டிய பிரதேசத்தில் உள்ள பட்டாசு தொழிற்சாலையில், நேற்று (7) மாலை ஏற்பட்ட தீ விபத்தில், அந்த தொழிற்சாலையின் உரிமையாளரும் மற்றொரு நபரும் உயிரிழந்துள்ளனர்.

சம்பவத்தில் கடும் தீக்காயங்களுக்கு உள்ளனான இவ்விருவரும், நீர்கொழும்பு வைத்தியசாலையின் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளனர். உரிமையாளரான ரன்கம்புலிகே கிரிசாந்த நிரோசன (34 வயது), தரிந்து மதுசங்க (18 வயது) ஆகியோரே சம்பவத்தில் பலியானவர்களாவர்.

விசில்  ஒலி எழுப்பும் வான வெடிகளை தயாரிக்கும் பட்டாசு தொழிற்சாலையே வெடி விபத்து ஏற்பட்டு பலத்த சேதத்திற்கு உள்ளாகியுள்ளது. சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments
Loading...