தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

முற்சதம் அடித்து அசத்தினார் மக்லம்

இந்தியா நியூசுலாந்து

இந்திய நியூசுலாந்து அணிகளுக்கிடையிலான 02ஆவது டெஸ்ட் போட்டியில் இறுதி நாளான இன்று 571ஓட்டங்களுக்கு 06 விக்கட் என்ற நிலையில் ஆட்டத்தை ஆரம்பித்த நியூசுலாந்து அணி 08 விக்கட் இழப்பிற்கு 680 ஓட்டங்களைப் பெற்ற போது தனது ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது.

281 ஓட்டங்களுடன் ஆட்டத்தை ஆரம்பித்த மக்லம் முற்சதம் அடித்து அசத்தினார். [302 (559 பந்துகள்)]

435 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி மூன்று விக்கட் இழப்பிற்கு 166 ஓட்டங்களை பெற்ற போது போட்டி சமநிலையில் முடிவடைந்தது. கோலி சதம் அடித்து உற்சாகமூட்டினார். (105ஓட்டம்)  ஆட்ட நாயகனாக நியூசுலாந்து அணித் தலைவர் மக்லம் தெரிவானார்.

Comments
Loading...