தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

உங்களது ஜிமெயிலை என்க்ரிப்ட் செய்வது எப்படி?

201704201650039542_how-to-encrypt-your-gmail_SECVPFமின்னஞ்சல் சேவையை பயன்படுத்த ஜிமெயில் தலைசிறந்த சேவையாக விளங்கி வருகிறது. கூகுளின் பிரபல மின்னஞ்சல் சேவை பாதுகாப்பாக இருக்கிறது என்றாலும் அதனை என்க்ரிப்ட் செய்யும் போது உங்களது ரகசியங்கள் எந்த சூழலிலும் பாதுகாப்பாகவே இருக்கும்.
பெரும்பாலான செயலிகளில் என்க்ரிப்ஷன் வசதி வழங்கப்பட்டுள்ள நிலையில் உங்களது ஜிமெயிலிலும் என்க்ரிப்ஷன் செய்ய முடியும். என்க்ரிப்ஷன் என்பது டிஜிட்டல் தரவுகளை பாதுகாக்கும் வழிமுறையாகும். இதில் உங்களது தரவுகளை மற்றவர்கள் இயக்க முற்படும் போது தரவு முற்றிலும் அழிந்து போகும்.
இங்கு உங்களின் ஜிமெயிலை பாதுகாப்பாக என்க்ரிப்ட் செய்ய என்ன செய்ய வேண்டும் என்பதை தொடர்ந்து பார்ப்போம்..,
ஃபயர்பாக்ஸ் பிரவுசரில் என்க்ரிப்ட் செய்வது எப்படி?
இண்டர்நெட் சேவைகளை பயன்படுத்த ஃபயர்பாக்ஸ் பிரவுசரை பயன்படுத்துபவர்கள் ஆட்-ஆன்ஸ் ஆன் ஃபயர்பாக்ஸ் (add-ons on Firefox) சேவையை பயன்படுத்தலாம். இந்த சேவையில் கிடைக்கும் என்க்ரிப்ட்டெட் கம்யூனிகேஷன்ஸ் எக்ஸ்டென்ஷன்-ஐ உங்களது ஃபயர்பாக்ஸ் பிரவுசரில் இன்ஸ்டால் செய்ய வேண்டும்.
இதன் பின் ஃபயர்பாக்ஸ் பிரவுசரை க்ளோஸ் செய்து மீண்டும் ஓபன் செய்ய வேண்டும். இனி ஜிமெயில் சென்று மின்னஞ்சலை கம்போஸ் செய்து, ரைட்-கிளிக் செய்தால் என்க்ரிப்ட் கம்யூனிகேஷன் (Encrypt Communication) ஆப்ஷனை பார்க்க முடியும்.
அடுத்து கடவுச்சொல் (பாஸ்வேர்டு) ஒன்றை பதிவு செய்து ஓ.கே (OK) பட்டனை கிளிக் செய்ய வேண்டும். இவ்வாறு செய்ததும் உங்களது தகவல் என்க்ரிப்ட் செய்யப்பட்டிருக்கும். எனினும் மின்னஞ்சலை பெறுபவரும் என்க்ரிப்ஷன் வசதி பெற்றிருக்க வேண்டும்.
சேஃப்ஜிமெயில் (SafeGmail):
கூகுள் க்ரோம் பயன்படுத்துபவர்கள் சேஃப்ஜிமெயில் (SafeGmail) பயன்படுத்தலாம். முதலில் குரோம் பிரவுசரில் சேஃப்ஜிமெயில் பிரவுசர் இன்ஸ்டால் செய்து பிரவுசரை ரீஸ்டார்ட் செய்ய வேண்டும். இனி ஃபயர்பாக்ஸ் பிரவுசரை போன்றே ஜிமெயிலில் மின்னஞ்சல் அனுப்பலாம். கூகுள் குரோமிலும் என்க்ரிப்ட் செய்யப்பட்ட மின்னஞ்சலை டீக்ரிப்ட் செய்ய எக்ஸ்டென்ஷன் இன்ஸ்டால் செய்யப்பட்டிருக்க வேண்டும்.
என்க்ரிப்ட் பட்டனை கிளிக் செய்து கேட்கப்படும் கேள்வி / பதில்களை பதிவு செய்து என்க்ரிப்ட்+சென்ட் (Encrypt+Send) பட்டனை கிளிக் செய்து மின்னஞ்சலை அனுப்பலாம். மின்னஞ்சலை பெறுபவருக்கும் கேள்வி எழுப்பும் திரை தெரியும், அதற்கு பதில் அளிக்கும் பட்சத்தில் மின்னஞ்சலை படிக்க முடியும்.
Comments
Loading...