தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மைத்திரி அரசுக்கு எதிராக ஜே.வி.பி வழக்கு!

கொலன்னாவை, குப்பைமலை சரிந்தமையால் ஏற்பட்ட அனர்த்தத்துக்கு, அரசாங்கமே பொறுப்புக் கூறவேண்டுமெனக் கோரி, மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி), அரசாங்கத்துக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்வதற்கு ஆலோசனை செய்து வருவதாக அறியமுடிகின்றது. வழக்குத் தாக்கல் செய்தல் தொடர்பில், ஜனாதிபதி சட்டத்தரணிகள் சிலருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக, அந்த முன்னணியின் மத்தியகுழு உறுப்பினரும், மேல் மாகாண சபை உறுப்பினருமான சட்டத்தரணி சுனில் வட்டகல தெரிவித்தார்.    தண்டனைக் கோவைச் சட்டத்தின் கீழே, வழக்குத் தாக்கல் செய்வதற்கு கலந்தாலோசித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது இயற்கை அனர்த்தம் அல்ல, கவனக்குறைவு காரணமாக ஏற்படுத்தப்பட்ட மனிதப் படுகொலையாகும்.    தண்டனைக் கோவைச்சட்டத்தின் 298ஆம் உறுப்பிரையின் பிரகாரம், கவனக்குறைவு காரணமாக இடம்பெறும் அனர்த்தங்கள் மற்றும் உயிரிழப்புகள் குற்றமாகும்.    மீதொட்டமுல்ல, குப்பைமலையினால் ஏற்படபோகும் அனர்த்தம் தொடர்பில் அரசாங்கம், அனர்த்த முகாமைத்துவ அமைச்சு மற்றும் கொழும்பு மாநகர சபை ஆகியவற்றின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது. எனினும், அந்த நிறுவனங்கள் உரிய காலத்தில், நடவடிக்கை எடுக்காமையால், 30 உயிர்களை இழக்கவேண்டிய நிலைமை ஏற்பட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Comments
Loading...