Designed by Iniyas LTD
ஸ்ரீலங்கா அரச பஸ் மீது கல்வீச்சு!
இலங்கைப் போக்குவரத்துக்குச் சொந்தமான பஸ் மீது சிலாபம் – பங்கதெனியவில் கல்வீச்சுத் தாக்குதல் சம்பவமொன்று, இன்று (25) 1 மணியளவில் இடம்பெற்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். தலைமன்னாரில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற, பஸ் மீதே இவ்வாறு கல்வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகப் ஸ்ரீ பொலிஸார் தெரிவித்தனர். குறித்த கல்வீச்சுத் தாக்குதலை மூவர் மேற்கொண்டு விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக, இ.போ.ச பஸ்ஸின் சாரதி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். சந்தேகநபர்கள் மூரையும் கைதுசெய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக, சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர். இந்தத் தாக்குதலில் குறித்த பஸ்ஸின் நடத்துனர் காயமடைந்த நிலையில், சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.