Designed by Iniyas LTD
ஸ்ரீ அரசினால் காணமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் புதிய அமைப்பு உருவாக்கம்!
ஈழத்தில் காணாமற்போனோரின் உறவுகளால் மற்றுமொரு புதிய அமைப்பு நேற்று உருவாக்கப்பட்டது. வடக்கு மாகாண முதலமைச்சரின் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தின் பின்னர் புதிய அமைப்பின் உத்தியோகபூர்வ அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.
‘வடக்கிலும் கிழக்கிலும் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான குரல்’ என்ற அமைப்பு காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளுக்கான பொறுப்புக் கூறலை பன்னாட்டு மட்டத்துக்கு எடுத்துச் சொல்லும் நோக்கில் உருவாக்கப்பட்டது. வடக்கு – கிழக்கில் மக்கள் போராட்டம் வலுவுற்றிருக்கும் தருணத்தில் தகவல் ரீதியாகவும் கருத்து ரீதியாகவும் தெளிவான கோரிக்கைகளை பன்னாட்டு மட்டத்தில் முன்வைக்க வேண்டும்.
பாதிக்கப்பட்டோருக்கான நீதியை பன்னாட்டுத் தரப்புகளும் இலங்கை அரசிடம் மட்டும் கையளித்துவிட்டு காலத்தை இழுத்தடித்துக் கொண்டுள்ளார்கள். சமுதாயத்துக்கு ஆதாரபூர்வமாகவும் கருத்தியல் ரீதியாகவும் உரத்துக் கூறவேண்டிய ஈழத்தமிழர்களின் ஒன்றிணைந்த குரலாக இந்த அமைப்பு இயங்கும். இராணுவ ஆக்கிரமிப்புக்கு தொடர்ந்தும் ஈழத்தமிழர்கள் ஆளாக்கப்பட்டிருக்கின்றார்கள்.
அமைதியான போராட்டங்களில் ஈடுபடுபவர்களும், நீதி கேட்பவர்களும் புலனாய்வுக் கண்காணிப்பு ஊடாக அச்சுறுத்தப்படுகின்றார்கள். இலங்கையில் உள்நாட்டு நீதித்துறை முக்கியமான விசாரணைகளை எல்லாம் கிடப்பில் போட்டு வருகின்றது.
தொடர்புடைய பதிவு
இனஅழிப்புப் போரின் பலவித பரிமாணங்களில் பாதிக்கப்பட்டவர்களாகவும் போராட்டங்களை முன்னெடுப்பவர் களாகவும் பெண்கள் இருக்கிறார்கள் . ஆனால் பெண்களின் குரலை அமைப்பு ரீதியாக முன்னிலைப்படுத்தும் தன்மை எம்மிடையே மிகவும் குறைவாக உள்ளது. ஒருங்கிணைந்த வேலைப்பாட்டுக்கான தளமாகவும் இந்த அமைப்பு இயங்கும் – என்றுள்ளது.
இந்தச் சந்திப்பையடுத்து செய்தியாளர்களிடம் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்ததாவது: அரச தலைவருடனான சந்திப்பின்போது எமது நிலைப்பாடு தொடர்பில் எடுத்துக்கூறி அடுத்த கட்ட நிலமை தொடர்பில் உறுதியான பதிலைப் பெற்றுத்தருமாறு காணாமற்போனோரின் உறவுகள் கோரியிருந்தனர். இதற்கான கருத்துப் பரிமாற்றமாகவே இந்தச் சந்திப்பு காணப்பட்டது. தற்போது நடத்தப்படும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டம் நீண்டு செல்வதால் ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது. எனவே இதற்குரிய தீர்வைப் பெறுவதற்கான வழி வகைகளை கண்டறிவதே சந்திப்பின் நோக்கமாகும்.
இவை தொடர்பில் பேச்சுக்கள் மற்றும் அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்காக காணாமற்போனோர் தொடா்பான தரவுகளை பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது எனவும் அதனை எவ்வாறு பெறுவது எனவும் ஆராய்ந்தோம். இதன்போது கடந்த காலங்களில் பன்னாட்டு செஞ்சிலுவைச் சங்கம் போன்ற அமைப்புகளால் பெறப்பட்ட தரவுகளையும் சேகரிக்கலாம் எனத் தீர்மானிக்கப்பட் டது.
இன்றைய (நேற்றைய) சந்திப்புக்களின் அடிப்படையில் இவை தொடர்பில் அரச தலைவருடனான சந்திப்பின்போது உரையாடப்படும் – என்றார்.
இந்தச் சந்திப்பில் காணாமற்போனோரின் உறவுகளுடன் வட மாகாண சபை உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம் , அனந்தி சசிதரன் ஆகியோரும் கலந்து கொண்டனா்.