Designed by Iniyas LTD
உலகத்தமிழர் வரலாற்று மைய வளாகத்தில் நடைபெற்ற மாதாந்த மாவீரர் வணக்க நிகழ்வு!
மாதாந்த மாவீரர் வணக்க நிகழ்வு வழமைபோல் 30.04.2017 ஞாயித்துக்கிழமை மாலை 4.30 மணியளவில் ஒக்ஸ்போட்டில் உள்ள உலகத்தமிழர் வரலாற்று மைய வளாகத்தில் உள்ள மண்டபத்தில் மிக உணர்வெழுச்சியுடன் நினைவு கொள்ளப்பட்டது.
தமிழீழ மாவீரர் பணிமனையினால் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்த இந்நிகழ்வில் பொதுச் சுடரினை லெப்.கிருபாணி அவர்களின் சகோதரி திருமதி சந்திரா ஏற்றிவைத்தார்.தொடர்ந்து பிரித்தானியக் கொடியினை திரு.பிரபா அவர்களும் தமிழீழ தேசியக்கொடியினை திரு.சூட்டி அவர்களும் ஏற்றி வைத்தனர்.
அக வணக்கத்தை தொடர்ந்து பொது மாவீரர் நினைவு கல்லறைக்கான ஈகைச்சுடரினை பிரிகேடியர் கடாபி அவர்களின் துணைவியார் திருமதி சுதா அவர்கள் ஏற்றி வைக்க, மலர் மாலையினை 2ம் லெப் அருன்மாறனின் சகோதரி திரு.வேணி சதீஸ்குமார் அவர்கள் அணிவித்தார்.
ஸ்ரீலங்கா இனவாத அரசினால் படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களின் நினைவுத் தூபிக்கான ஈகைச்சுடரினை திருமதி சுதனா அவர்கள் ஏற்றி வைத்தார்.
மலர் மாலையினை திருமதி நர்மதா அவர்கள் அணிவித்தார்.தொடர்ந்து மலர் வணக்கத்தினை திரு.பாலு அவர்கள் ஆரம்பித்து வைக்க நிகழ்வில் கலந்து கொண்ட தமிழ் உறவுகள் மலர் தூவி விளக்கேற்றி தமது அஞ்சலியை செலுத்தினர்.
தொடர்ந்து இடம்பெற்ற அரங்க நிகழ்வின் தலைவர் திரு.ரஞ்சன் மாமா அவர்கள் ஆற்றினார். நினைவுரையினை திரு.புரட்சி அவர்கள் ஆற்ற ஆனந்தபுர சமர்க்கள நாயகன் நினைவுரையினை திரு.சங்கீதன் அவர்கள் நிகழ்த்தினார்.
தொடர்ந்து இதே தினம் வீரச்சாவடைந்த மாவீரன் ஜீவனின் நினைவுரையினை அவரது சகோதரன் திரு.பத்மநாதன் அவர்கள் ஆற்ற மாவீரர்களுக்கான நினைவுக் கவிதையினை திருமதி நிலா மற்றும் அருன்மாறனின் சகோதரி அவின் அவர்கள் வழங்கினார்.
சிறப்பு நிகழ்வினை செல்வன்,புரட்சி,தனபாரதியின் கீ போட் மூலமாணி புரட்சிப் பாடல் இசைவிருந்தளிக்கப் பட்டது. வழமைபோல் புரட்சிப் பாடல்களை திரு.சுரேஷ்,ஜெயம்,தனதயாளன் ஆகியோர் பாடி நிகழ்வினை சிறப்பிக்க மாவீரர் ஆத்ம சாந்திக்கான வளாகத்தில் உள்ள அற்புத விநாயகர் ஆலையத்தில் பொங்கல் பூசை வழிபாடுகளும் இடம்பெற்றது. இம்மாத நினைவு வணக்க நிகழ்வு மிக உணர்வெழுச்சியுடன் நினைவு கொள்ளப்பட்டது.






