தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஒரே பிரதேசத்தை சேர்ந்த நான்கு பெண்கள் மாயம்

மொனராகலை, புத்தள பகுதியில் இருந்து காணாமல் போன நான்கு பெண்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

காணாமல் போன பெண்களின் உறவினர்கள் மேற்கொண்ட முறைப்பாட்டினை தொடர்ந்தே, பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

34 வயதுடைய தன் மனைவியை காணவில்லை என கணவரும், 19 மற்றும் 20 வயதுடைய தன் மகள் மூவரை காணவில்லை என பெற்றோர்கள் மூவரும் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

கடந்த முதலாம் திகதி முதல் நேற்று வரையில் குறித்த நான்கு பெண்களும் காணாமல் போயுள்ளனர் என பொலிஸார் கூறியுள்ளனர்.

இதேவேளை, சம்பவம் தொடர்பில் புத்தள பொலிஸார் மேலதிக விசாரணைகள் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...