Designed by Iniyas LTD
பேஸ்புக்கில் 2 பேருடன் தொடர்பு..? கார் ஏற்றி பள்ளி ஆசிரியை கொலை..! சென்னையில் பயங்கரம்!
பேஸ்புக்கில் 2 பேருடன் தொடர்பு..? கார் ஏற்றி பள்ளி ஆசிரியை கொலை..! சென்னையில் பயங்கரம்!
சென்னை அண்ணாநகரில் நடந்து சென்ற நிவேதிதா என்ற பள்ளி ஆசிரியர் மீது கார் ஏற்றி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தீயணைப்பு துறையில் வேலை செய்து வந்த இளையராஜா என்பவருக்கு பள்ளி ஆசிரியை நிவேதிதா என்பவருடன் பேஸ்புக் மூலம் நட்பு ஏற்பட்டுள்ளது. பின்னர் இரண்டு பேரும் காதலித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், கணபதி என்ற வாலிபர் கடந்த சில நாட்களுக்கு முன்பு நிவேதிதாவிற்கு, பேஸ்புக் மூலம் அறிமுகமாகியுள்ளார். இரண்டு பேரும் நெருக்கமாக பழகி வந்ததாக தெரிகிறது. இதனை கேள்விப்பட்ட இளையாராஜா, அண்ணாநகரில் நடந்து சென்றுகொண்டிருந்த நிவேதிதா மீது காரை வேகமாக மோதியுள்ளார்.
இதில் நிவேதிதா ரத்த வெள்ளத்தில் சாலையில் விழுந்துள்ளார். இதனை பார்த்த அப்பகுதியினர் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே நிவேதிதா பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து, இளையராஜாவை கைது செய்துள்ளனர். ஒரு பள்ளி ஆசிரியர் மீது காரை ஏற்றி கொன்ற சம்பவம் சென்னை மக்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.