தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

இலங்கைக்கு இராணுவ உதவிகள் நிறுத்தப்படும்.

இலங்கைக்கு வழங்கப்பட்டு வரும் இராணுவ உதவிகள் இடைநிறுத்தப்படும் என பிரிட்டன் தொழிற்கட்சி உறுதியளித்துள்ளது என கொழும்பு பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பிரிட்டனில் விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

பிரிட்டன் தொழிற் கட்சியின் தலைவர் ஜெரொமி கோர்பின், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான புலம்பெயர் சமூகத்துடன் நெருங்கிய தொடர்பு பேணி வருவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த நெருங்கிய தொடர்பு காரணமாக இலங்கைக்கு வழங்கப்பட்டு வரும் இராணுவ உதவிகளை தாம் ஆட்சிக்கு வந்தால் இடைநிறுத்துவதாக கோர்பிக் உறுதியளித்துள்ளார்.

மேலும், இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கு சுயாட்சி அதிகாரங்களை வழங்க பிரிட்டன் செயற்படும் என தெரிவித்துள்ளார் என ஊடகம் மேலும் செய்தி வெளியிட்டுள்ளது.

பிரிட்டன் தொழிற் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...