Designed by Iniyas LTD
‘‘தமிழர்கள் எனக்கு மறைமுக ஆதரவு’’ ரஜினிக்கு சு.சுவாமி மறைமுகத் தாக்கு!
பாஜக எம்பியும், முக்கிய தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி அவ்வப்போது முன்னுக்கு பின் முரணான கருத்துக்களையும், எதிர்ப்புகளையும் கூறி பல்வேறு சர்ச்சையை உண்டாக்கி பரபரப்பை ஏற்படுத்தி வருவார்.
ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின்போது, தமிழக இளைஞர்களை பொறுக்கிகள் என விமர்சனம் செய்து பல எதிர்ப்புகளுக்கு ஆளாகியவர் சுப்பிரமணிய சுவாமி. தொடர்ந்து, அதிமுக உட்கட்சி பூசல், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் போன்றவற்றிற்கும் கருத்துகளை கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார்.
இந்நிலையில், தற்போது ரஜினி அரசியலுக்கு வருவது குறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள சுப்பிரமணிய சுவாமி, ‘‘சினிமா நட்சத்திரங்களை தமிழக அரசியலுக்குள் அனுமதிக்கக் கூடாது என்ற எனது கருத்துக்கு பெரும்பாலான தமிழர்கள் மறைமுகமாக ஆதரிக்கிறார்கள். அதனால் ரஜினி அரசியலுக்கு வருவது குறித்து சற்று யோசிக்க வேண்டும்.’’ எனக் கூறியுள்ளார்.
சுப்பிரமணியன் சுவாமியின் இந்த அதிரடி ட்டுவிட், அரசியலுக்கு தயாராகும் ரஜினியை மறைமுகமாக தாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.