தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

தமிழக மீனவர்கள் மீது ஸ்ரீ கடற்படை கொடூர தாக்குதல்!

கச்சத்தீவு அருகே மீன்பிடியில் ஈடுபட்ட தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
ராமேஸ்வரம், பாம்பன் மற்றும் மண்டபம் ஆகிய சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று (புதன்கிழமை) 600 விசைப்படகுகளில் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.
இதில் சில மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது கற்கள் மற்றும் போத்தல்களை கொண்டு இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
அத்தோடு இலங்கை படையினர் ரோந்து கப்பலைக் கொண்டு மோதியதால் ராமேஸ்வரம் மீனவர்களின் படகுகளும் சேதமடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.
மேலும் மீனவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்களையும் பறிமுதல் செய்த இலங்கை கடற்படையினர், அவர்களின் மீன்பிடி சாதனங்களையும் சேதப்படுத்தியுள்ளதோடு, சுமார் 5 மணிநேரமாக 20 மீனவர்களின் கைகளை கட்டிப்போட்டு இரும்புக்கம்பியால் தாக்கியதாகவும் மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இச்சம்பவம் மீனவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Comments
Loading...