Designed by Iniyas LTD
பூர்வீக நிலமான இரணைதீவை விடுவிக்கக்கோரி வீதி மறியல் போராட்டம்.
தங்களது பூர்வீக நிலமான இரணைதீவை விடுவிக்கக்கோரி கடந்த 54 நாட்களாக போரட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறித்த மக்களுக்கான பதிலை அரசு வழங்காத நிலையில் இந்த மக்கள் இன்று ஏ-32 பூநகரி மன்னார் வீதியினை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கிளிநொச்சி மாவட்டத்தின் அதிக கடல் வளம் கொண்ட பகுதியாகக் காணப்படும் இரணைதீவில் வாழ்ந்த மக்கள் கடந்த 1992 ஆம் ஆண்டு முதல் இடம்பெயர்ந்து முழங்காவில் பகுதியில் வாழ்ந்துள்ளனர்.
இந்த நிலையில் கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் தங்களை தங்களை சொந்த நிலங்களில் மீள்குடியேற்றுமாறு கோரி தொடர் கோரிக்கையினை விடுவித்து வந்துள்ளனர்.
மேலும், இவர்களது கோரிக்கைகளுக்கு இதுவரை எவரும் பதில் வழங்காத நிலையில் இந்த மக்கள் கடந்த மே மாதம் 1 ஆம் திகதி முதல் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.