தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

இலங்கை கொத்துரொட்டி களைகட்டி பறக்குது!

சுவிட்சர்லாந்தில், நிற்வால்டன் (Nidwalden) மாநிலத்தில் உலக அகதி தினத்தை முன்னிட்டு சிறப்பு நிகழ்வுகள் நடைபெற்றன.

நிற்வால்டன் (Nidwalden) மாநிலத்தின் ஸ்ரன்ஸ் (Stans) பகுதியிலுள்ள தேவாலயத்தின் அருகில் குறித்த அகதிகள் தின சிறப்பு நிகழ்வுகள் இடம்பெற்றன.

இதில் பல நாடுகளின் உணவுகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்ததுடன், விற்பனையும் செய்யப்பட்டன. இதன்போது மரக்கறி மற்றும் உணவு பாவனைக்கான பொருட்களும் விற்பனை செய்யப்பட்டன.

குறிப்பாக இலங்கை நாட்டவரால் இலங்கையின் சுவையுணவு கொத்துரொட்டியும் விற்பனை செய்யப்பட்டது. சுவிஸ் உட்பட பல நாட்டு மக்களும் இந்த உணவினை மிகவும் விருப்பத்தோடு சுவைத்திருந்தனர்.

Comments
Loading...