Designed by Iniyas LTD
ஒற்றையாட்சித் தன்மையை சிறிலங்கா அரசாங்கம் பாதுகாக்கும் – மகாநாயக்கர்களிடம் உறுதி
நாட்டின் ஒற்றையாட்சித் தன்மையை சிறிலங்கா அரசாங்கம் பாதுகாக்கும் என்று, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க, உறுதியளித்துள்ளார்.
கண்டியில் கடந்த திங்கட்கிழமை அஸ்கிரிய மற்றும் மல்வத்த பீடங்களின் மகாநாயக்கர்களைச் சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார்.
“நாட்டின் ஒற்றையாட்சித் தன்மையை அரசாங்கம் பாதுகாக்கும். அரசியலமைப்பில் பௌத்த மதத்துக்கான முன்னுரிமை உறுதிப்படுத்தப்படும்.
அனைத்துலக சமூகத்துடனான தொடர்புகளின் போது, சிறிலங்காவின் அடையாளம் பாதுகாக்கப்படும்.” என்றும் அவர் மகாநாயக்க தேரர்களிடம் உறுதியளித்துள்ளார்.