Designed by Iniyas LTD
மைத்திரியை கொலை செய்யத் திட்டம் தீட்டிய தமிழ் பெண்ணுக்கு நேர்ந்த கதி
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கொலை செய்யத் திட்டமிட்ட வழக்கில் குற்றத்தை ஒப்புக்கொண்ட பெண் ஒருவருக்கு 10 ஆண்டுகள் ஒத்திவைக்கப்பட்ட 2 வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், குறித்த பெண்ணிற்கு 25 ஆயிரம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அதனை செலுத்த தவறினால் மேலும் 6 மாத காலத்திற்கு சிறைத் தண்டனை அதிகரிக்கக் கூடும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பியசேன ரணசிங்க இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
வவுனியா பகுதியை சேர்ந்த 62 வயதான செல்வகுமார் வேலமணி என்ற பெண்ணுக்கே இவ்வாறு கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சராக கடமையாற்றிய 2008ம் ஆண்டு மார்ச் மாதம் 15ம் திகதி பொரலஸ்கமுவ பகுதியில் வைத்து தற்கொலை குண்டு தாக்குதல் மூலம் அவரை கொலை திட்டமிடப்பட்டிருந்தது.
கொலைசெய்ய முயற்சித்த தரப்பினருக்கு குறித்த பெண் இடம் வழங்கியுள்ளார். இந்நிலையில், கொலை செய்வதற்கு திட்டமிட்டமையின் கீழ் குறித்த பெண்ணுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.