தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

குருநாகலில் நடந்த விபத்தில் இராணுவ சிப்பாய் பலி!

குருநாகல் பிரதேசத்தில் இடம்பெற்ற இரு வேறு வாகன விபத்தில், இராணுவ சிப்பாய் ஒருவர் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர்.

குருநாகலை – தம்புள்ள பிரதான வீதியின் படல்கமுவ பிரதேசத்தில், இராணுவ சிப்பாய் ஒருவர் செலுத்திச் சென்ற பஸ்ஸும் லொறி ஒன்றும் மோதுண்டு விபத்துக்குள்ளானது.

இதன்போது, பஸ்ஸை செலுத்திச் சென்ற இராணுவ வீரர் படுகாயங்களுக்குள்ளான நிலையில், குருநாகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, அதே பிரதேசத்தில் ஜீப் வண்டி ஒன்றும் கெப் ரக வாகனமும் மோதுண்டு விபத்துக்குள்ளானதில், 38 வயது நிரம்பிய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

Comments
Loading...