Designed by Iniyas LTD
தேர்தல் கருத்துக்கணிப்புகளில் பணம் பெற்றுக்கொண்டு குறிப்பிட்ட கட்சிகளுக்கு சாதகமாக செயற்படுகின்றது
தேர்தல் கருத்துக்கணிப்புகளில் பணம் பெற்றுக்கொண்டு, குறிப்பிட்ட கட்சிகளுக்கு சாதகமாக சில நிறுவனங்கள் செயல்படுவதாக ‘ஸ்டிங் ஆபரேஷன்’ என்னும் ரகசிய நடவடிக்கை மூலம் இந்தி செய்தி சேனல் ஒன்று அம்பலப்படுத்தியது. இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இத்தகைய செயலில் ஈடுபடுவோர் மீது தேர்தல் கமிஷன் வழக்கு தொடர வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி முறையிட்டுள்ளது. இதுதொடர்பாக தலைமை தேர்தல் கமிஷனர் வி.எஸ்.சம்பத்துக்கு அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் கே.சி.மிட்டல் கடிதம் எழுதி உள்ளார். அதில் அவர், அரசியல் சட்டம் பிரிவு 324 வழங்கியுள்ள அதிகாரத்தை தேர்தல் கமிஷன் பயன்படுத்தி, தேர்தல் கருத்துக்கணிப்புகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கோரி உள்ளார்.
இதுபற்றி தலைமை தேர்தல் கமிஷனர் வி.எஸ்.சம்பத்திடம் டெல்லியில் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், ‘‘கருத்துக்கணிப்புகளைப் பொறுத்தமட்டில், தேர்தல் கமிஷன் ஒரு கருத்தினை எடுத்துள்ளது. இன்றல்ல. 2004–ம் ஆண்டில் அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தி அதன்பின்பு தேர்தல் கமிஷன் தனது பரிந்துரைகளை அரசிடம் அளித்துள்ளது. அரசுதான் இதில் முடிவு எடுக்க வேண்டும்’’ என பதில் அளித்தார்.