Designed by Iniyas LTD
யாழில் படகு விபத்து! ஒருவர் பலி
யாழ்.பண்ணை குருசடி தீவில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளதுடன், சிறுமி உட்பட ஏனைய 5 பெண்களும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
பண்ணை குருசடி தீவில் அமைந்துள்ள அந்தோனியார் ஆலயத்திற்கு சென்ற வேளையிலேயே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் மீட்கப்பட்டவர்கள் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த அனர்த்தத்தில் சிக்குண்டு ரி. குயின்சன் (வயது 28) என்ற குடும்பஸ்தர் பலியாகியுள்ளார். சிறுமி உட்பட ஏனைய 5 பெண்களும் மீனவர்களினால் மீட்கப்பட்டுள்ளனர்.
மேலும் உயிரிழந்த குடும்பஸ்தரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.