Designed by Iniyas LTD
சரத் பொன்சேகா மீது போர்க்குற்றம் சுமத்தப்படாதது ஏன்? – கேள்வி எழுப்புகிறது பொது ஜன முன்னணி
சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு எதிராக, போர்க்குற்றச்சாட்டுகள் எதுவும் பதிவு செய்யப்படாதது ஏன் என்று, மகிந்த ராஜபக்ச ஆதரவு கட்சியான, சிறிலங்கா பொதுஜன முன்னணி கேள்வி எழுப்பியுள்ளது.
சிறிலங்கா பொதுஜன முன்னணியின் அமைப்பாளரான அஜித் பிரசன்ன, இதுகுறித்து கருத்து வெளியிடுகையில்,
“ ஜெனரல் ஜெயசூரிய, அப்போதைய இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் கீழ் தான் செயற்பட்டவர்.
அமெரிக்கா ஆதரவு அரசாங்கத்துடன் இருப்பதால் தான், இத்தகைய குற்றச்சாட்டில் இருந்து சரத் பொன்சேகாவுக்கு விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.
ஜெகத் ஜயசூரியவுக்கு எதிரான இந்தக் குற்றச்சாட்டுகள், சிறிலங்கா இராணுவத்துக்கு மோசமான அடியாகும். புலம் பெயர் தமிழர்களின் இந்த குற்றச்சாட்டுகளை நாம் கண்டிக்கிறோம்.
இராணுவத் தளபதியாக லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க நியமிக்கப்பட்டதிலும், கடற்படைத் தளபதியாக வைஸ் அட்மிரல் ட்ராவிஸ் சின்னையா நியமிக்கப்பட்டதிலும், சரியான நடைமுறைகள் பின்பற்றப்படவிலலை” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.