தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

அரசியலுக்கு வருவாரா சந்திரிகாவின் மகன் விமுக்தி?

தனது மகன் விமுக்தி குமாரதுங்கவை அரசியலுக்கு கொண்டு வரும் நோக்கம் தனக்குக் கிடையாது என்று சிறிலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

“எனது மகன் விமுக்தி குமாரதுங்கவை அரசியலுக்குள் நுழைவதற்கு நான் ஊக்குவிப்பதாக சில சமூக ஊடகங்களிலும், இணையங்களிலும் செய்திகள் வெளியாகியுள்ளன.

எனது மகனையோ, மகளையோ நான் அரசியலுக்குத் தயார்படுத்தவில்லை.

அரசியல்வாதிகளை நான் தெரிவு செய்ய முடியாது. மக்கள் தான் தெரிவு செய்கிறார்கள்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Comments
Loading...