தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

இந்தியா இலங்கை ஆட்டத்தில் வென்றது இலங்கை – சதம் அடித்தார் சங்ககாரா

இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தின் கடைசிக் கட்டத்தில் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருந்த இலங்கை  அணியின் பயிற்சியாளர் பெல் ஃபர்பிரே ஒருவழியாக மகிழ்ச்சிக்குள்ளாக்கினர் இலங்கை வீரர்கள்.ஆசிய கோப்பை

இக்கட்டான  நிலையில்  சிறப்பாக  விளையாடி  103 ரன்கள்  எடுத்திருந்த சங்ககாரா,  இறுதிக்  கட்டத்தில்  ஆட்டமிழந்ததால்,  இந்திய  ரசிகர்களின்  பிரார்த்தனை  அதிகரித்தது.  இருப்பினும்,  இந்திய  ரசிகர்களை  விட இலங்கை  ரசிகர்கள்  முன்னிலையில்  இருந்ததால்,  அந்த அணி  2 விக்கெட்  வித்தியாசத்தில்  வெற்றி பெற்றது.

இந்த ஆட்டம்  ஃபதுல்லாவில்  உள்ள கான்  ஷாகீப் உஸ்மான் அலி மைதானத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இலங்கை  அணி டாஸ்  வென்றது.  இந்தியா  அண்டை நாடு  என்பதால்,  வீரர்களின் பலம்  மற்றும் பலவீனங்களை இலங்கை வீரர்கள் நன்கு அறிந்து வைத்திருந்தனர். மேலும்  தங்களது  பந்து  வீச்சின் மீதுள்ள  நம்பிக்கையால்  இந்திய  அணிக்கு  முதலில் பேட் செய்யும்  வாய்ப்பை  வழங்கினர்.

இலங்கை அணியின் இந்த முடிவு அந்த அணிக்கே சாதகமாக அமைந்தது. 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணியினால் 9 விக்கெட்டுகளை இழந்து 264 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

சர்மா தடுமாற்றம்: தீபாவளிப் பண்டிகை தினத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 200 ரன்களை அடித்து சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்த ரோஹித் சர்மா, அடுத்தடுத்த தொடர்களில் கடும் சரிவைச் சந்தித்து வருகிறார். அது, இந்த ஆட்டத்திலும் தொடர்ந்தது. 28 பந்துகளைச் சந்தித்த அவர் 13 ரன்களில் தனது விக்கெட்டைப் பறிகொடுத்து, இந்திய அணியின் தொடக்கத்தை மற்றொருமுறை பலவீனப்படுத்தினார்.

தவன்-கோலி கூட்டணி: அடுத்து களமிறங்கிய கேப்டன் கோலி, தவனுடன் இணைந்தார். களத்தில் ரன் எடுக்காமல் வெறும் பந்துகளை மட்டும் எதிர்கொள்வது பேட்ஸ்மேனுக்குத்தான் நெருக்கடி என்பதை அறிந்து வைத்துள்ள கோலி, நெருக்கடியின்றி ரன் சேர்த்து வந்தார். அதனால், தவன் எவ்வித அழுத்தமின்றி தனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

நன்றாக ஆடி வந்த இந்த ஜோடியைப் பிரித்து சக வீரர்களின் பாராட்டைப் பெற்றார் மெண்டிஸ். கோலி 48 ரன்களிலும் (1 சிக்ஸர், 4 பவுண்டரி), தவன் 94 ரன்களிலும் (1 சிக்ஸர், 7 பவுண்டரி) பெவிலியன் திரும்பினர்.

முன்னணி வீரர்கள் ஏமாற்றினால், கடைசிக் கட்டத்தில் பலம் சேர்க்கும் மகேந்திர சிங் தோனி போட்டியில் இல்லாததன் வெறுமையை இந்த ஆட்டம் உணர்த்தியது. மற்ற வீரர்கள் பேட் செய்ய வருவதும், பின்னர் வீரர்கள் அறைக்குத் திரும்பும் காட்சி இந்த ஆட்டத்தில் அரங்கேறியது.

ரூ. 12.5 கோடிக்கு ஐபிஎல் போட்டிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட தினேஷ் கார்த்திக் 4 ரன்களில், தனது விலை மதிப்புமிக்க விக்கெட்டைப் பறிகொடுத்தார்.

ஆல் ரவுண்டர் ஜடேஜா இறுதிவரை ஆட்டமிழக்கவில்லை என்றாலும், 27 பந்துகளில் ஒரு சிக்ஸர் உதவியுடன் 22 ரன்கள் மட்டுமே எடுத்தார். கடைசி விக்கெட்டாகக் களமிறங்கிய சமி, வழக்கமான பந்து வீச்சாளர்கள் பாணியில் 2 சிக்ஸரை விரட்டி ஆட்டமிழக்காமல் 14 ரன்கள் எடுத்தார். இதனால், இந்திய அணி 264 எனும் சவால்  அளிக்கும் ஸ்கோரை எட்டியது.

இலங்கைத் தரப்பில் மெண்டிஸ் 4 விக்கெட்டுகளையும், சேனநாயகே 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

கேட்ச் மிஸ்; சிறப்பான தொடக்கம்: 265 ரன்கள் என்ற எளிய அல்லது கடின இலக்கை, சேஸ் செய்து விடலாம்  என்று எண்ணி இலங்கையின் பெரேராவும், திரிமன்னேவும் களமிறங்கினர். பெரேரா அடித்த பந்தை தவனும்,  ரஹானேவும் விட்டுக்கொடுக்காமல் பிடிக்க முயன்றனர். ஆனால், பந்தை கோட்டை விட்டனர். பந்து எல்லைக் கோட்டைக் கடந்தது. அப்போது இலங்கையின் ஸ்கோர் 13; பெரேரா 7 ரன்கள். பின்னர் சுதாரித்து விளையாடியது இலங்கை.  அதனால்,  80 ரன்களில்தான்  முதல் விக்கெட்டை இழந்தது.  வாய்ப்பைப் பயன்படுத்தி விளையாடிய பெரேரா இந்த ஆட்டத்தில் அடித்த ரன் 64. இது, தோல்விக்கான முக்கியகாரணியாக அமைந்தது.

திரிமன்னே 38 ரன்களில் வெளியேற சங்ககாரா களமிறங்கினார். மற்ற அனைத்து வீரர்களும் ஒற்றை இலக்கத்தில் வெளியேறினாலும், மூத்த வீரர், அனுபவ வீரர், அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும் பொறுப்பு நம்மையே  சாரும் என்ற  கடமையை  உணர்ந்து  சங்ககாரா  செயல்பட்டார்.  அதற்குப் பலனாக இலங்கை 49.2 ஓவர்களில் 8 விக்கெட்டை இழந்து 265 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இந்தியத் தரப்பில் சமி, ஜடேஜா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

வங்கதேசம்-ஆப்கன் இன்று மோதல்

மின்னோஸ் (சிறுமீன்கள்) என்றழைக்கப்படும் ஆப்கானிஸ்தான் அணியும், வங்கதேச அணியும் சனிக்கிழமை மோதுகின்றன. இரு அணிகளும், தங்களது முதல் ஆட்டத்தில் தோல்வியைத் தழுவின. அதனால், இந்த ஆட்டத்தில் வென்றால் மட்டுமே, ஆசிய கோப்பைக்கான போட்டியில் தங்களது இருப்பை நிறுத்த முடியும். அதனால் இரு அணிகளுக்கும் இந்த ஆட்டம் முக்கியமானதாகும். ஆசிய கோப்பையை நடத்தும் நாடு என்ற அந்தஸ்தில் அடுத்த சுற்றுக்கு முன்னேற வேண்டிய தார்மீகப் பொறுப்பு வங்கதேசத்துக்கு உண்டு. அதேசமயம், ஏதாவது அதிசயம் நிகழ்த்தும் ஆவலில் ஆசிய கோப்பைக்கு அறிமுகமாகியுள்ள ஆப்கனும் இந்த ஆட்டத்தை எதிர்கொண்டுள்ளது. எனவே, கத்துக்குட்டி அணிகளுக்கு இடையேயான ஆட்டம் என்றாலும், இந்த ஆட்டத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர்.

“எங்களிடம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்’

ஆப்கன் பயிற்சியாளர் கபீர் கான்:பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் தோற்றாலும், சவாலான ஆட்டத்தை ஆப்கன் அணி வெளிப்படுத்தியது. அதனால், தமது அணி வீரர்களின் மீது அதிக நம்பிக்கை வைத்துள்ள அந்த அணியின் பயிற்சியாளர் கபீர் கான், “இந்தியாவும், இலங்கையும் எங்களது அணியை எச்சரிக்கையுடன் எதிர்கொள்ள வேண்டும்’ என்று வார்த்தை விளையாட்டுகளை ஆரம்பித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், “ஆசிய கோப்பையில் ஒன்று அல்லது 2 ஆட்டங்களில் வெல்லும் வேட்கையுடன் ஆப்கன் வீரர்கள் உள்ளனர். இத்தொடருக்கு நாங்கள் வந்தது, கோப்பையை வெல்வதற்காக அல்ல. ஓரிரு வெற்றிகளைப் பெறுவதற்காக மட்டுமே. அவ்வாறான வெற்றிகள் அணியின் எதிர்காலத்தை மாற்றி அமைக்கும். அது, இளம் வீரர்களுக்கு உத்வேகத்தை ஏற்படுத்தும். பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தைத் தொடர்ந்து, எங்களை எதிர்கொள்ளும் அணிகள் ஒருமுறைக்கு 2 முறை சிந்திக்கும். குறிப்பாக எங்களது பந்து வீச்சை மற்ற அணிகள் எளிதாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள்’ என்று கூறினார்.

மோர்டசா விலகல்; வங்கதேசத்துக்கு மேலும் பின்னடைவு

போட்டியை நடத்தும் வங்கதேச அணிக்கு, எதிரணியைவிட வீரர்களின் காயம் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே முன்னணி வீரர்கள், காயத்தால் அவதிப்பட்டு வரும் வேளையில் வேகப்பந்து வீச்சாளர் மஷ்ரஃப் மோர்டசா காயம் காரணமாக ஆசிய கோப்பையிலிருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் ஷஃபியுல் இஸ்லாம் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஸ்கோர் போர்டு

 இந்தியா

 உபரிகள் 11

மொத்தம் (50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு) 264

விக்கெட் வீழ்ச்சி:

1-33 (சர்மா), 2-130 (கோலி), 3-175 (ரஹானே),

4-196 (தவன்), 5-200 (கார்த்திக்), 6-214 (ராயுடு),

7-215 (பின்னி), 8-245 (அஸ்வின்), 9-247 (குமார்).

பந்து வீச்சு:

மலிங்கா 10-0-58-1; மேத்யூஸ் 3.2-1-9-0;

சேனநாயகே 10-0-41-3; தி.பெரேரா 6.4-0-40-0;

மெண்டிஸ் 10-0-60-4; டி சில்வா 10-0-51-1.

இலங்கை

உபரிகள் 8

விக்கெட் வீழ்ச்சி:

1-80 (திரிமன்னே), 2-134 (பெரேரா), 3-148 (ஜெயவர்த்தனே), 4-148 (சண்டிமால்), 5-165 (மேத்யூஸ்), 6-183 (சேனநாயகே), 7-216 (டி சில்வா), 8-258 (சங்ககாரா).

பந்து வீச்சு:

புவனேஷ்வர் குமார் 9.2-1-45-0; முகமது சமி 10-0-81-3; அஸ்வின் 10-0-42-2; பின்னி 4-0-22-0; ஜடேஜா 10-1-30-3, ராயுடு 1-0-9-0, சர்மா 5-0-29-0.

Comments
Loading...