Designed by Iniyas LTD
ஐரோப்பிய ஒன்றியக் குழு சம்பந்தனுடன் சந்திப்பு
சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றக் குழுவினர், நேற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளனர்.
ஜீன் லம்பேர்ட் தலைமையிலான நான்கு பேர் கொண்ட ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றக் குழு சிறிலங்கா வந்துள்ளது.
இந்தக் குழுவினர் நேற்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனையும், சபாநாயகர் கரு ஜெயசூரியவையும் சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தனர்.
அரசியலமைப்பு மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தொடர்பாக ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்தே இந்தச் சந்திப்பில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.