Designed by Iniyas LTD
ஆயிரம் ஆயிரம் மாவீரரின் இலட்சியம் வென்றிட அண்ணனை காருங்கள் – கரும்புலி பூட்டோ
போய் வருகிறேன் என்றான்
கரும்புலி பூட்டோ
போரில் ஈழம் வெல்ல வலுசேர்த்தாய் நீ
என்பது நிச்சயமாகும்; என்றாள்அருகிருந்த
கரும்புலி அஜித்தாஅக்கா(15/07/2006)
ஆம் 1994 முதல் எனக்கு அறிமுகமான அந்த
மாவீரன் அவனது வீரமரணத்தை முன்னமே அறிந்திருந்தான் என்று தான் நான் என்னுகிறேன்
இல்லையெனில் இவன் இத்தனை ஆண்டுகள் கடந்து எனை தேடி வந்து விடைபெற வேண்டியிருக்காது ,பூட்டோ வன்னி வந்திருப்பதாக என்நண்பன் சுடர் சொன்னான் இரண்டு நாட்களின் பின் இந்த சந்திப்பு நடந்தது, பின் இரண்டொரு நாளில் என்வீடு வந்தான் என் மனைவியுடன் பேசிமகிழ்ந்தான் அவவும் போராளி எனவே பூட்டோவை பற்றி அறிந்திருந்தார் போர்க்கள அனுபவங்கள் பேசினார்கள் தேனீர் அருந்தி மகிழ்ந்தான் தேவைக்கு அதிகமாக எதுவும் இல்லாத எங்கள் வீட்டில்
தேவை தனக்கொரு பேப்பர் என்றான் தேடிப்பார்த்தேன்
தேய்ந்த மட்டையுடன் எழுதுபுத்தகமொன்று சேவையை நிறைவு செய்யும் தறுவாயில் இருந்த அதை பிரட்டி அவன் இப்படி எழுதினான் ,
“சொட்டை விழுந்து மொட்டையாகி போனாலும்
மறவாதிருக்க மட்டையில் எழுதுகிறேன்
பெண் பிள்ளை பிறந்தாள் சங்கரி என்றும்
ஆண்பிள்ளை பிறந்தாள் சங்கரன் என்றும்
என் பெயர் சூட்டுங்கள் அண்ணனுக்கு உதவிட
நல்வழி காட்டுங்கள்
ஆயிரம் ஆயிரம் மாவீரரின் இலட்சியம் வென்றிட
அண்ணனை காருங்கள்!! “
இவ்வாறு பூட்டோ தன் கைப்படெழுதினான் இத்தனை ஆண்டுகள் கடந்து அம்மாவீரனை நினைவு செய்கிறேன் எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் எம்மாவீரர்கள் எம்மனங்களில் வாழ்வார்கள்!
அவர்கள் கண்ட ஈழம் நினைவாக எம்மக்களின் நின்மதியான வாழ்வு
நிறைவேற அனைத்து தமிழர்களும் பாடுபட வேண்டும் !!!!
போராளி இளமாறன் – இம்ரான் பாண்டியன் படையணி