Designed by Iniyas LTD
மொரோக்கோவில் உணவுக்காக நெரிசலில் சிக்கி 15 மக்கள் பலி!
மொராக்கோ நாட்டின் மத்திய மேற்கு பகுதியில் உள்ள காசாபிலாங்கா நகரின் தென்மேற்கில் சுமார் 150 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள சிடி பொவலேம் கிராம மக்களுக்கு இன்று ஒரு அமைப்பின் சார்பில் உணவு மற்றும் நிவாரணப் பொருட்கள் இலவசமாக அளிக்கப்பட்டது.
இந்தப் பொருட்களை பெறுவதற்கு ஏராளமான மக்கள் குவிந்தனர். கூட்டத்தை கட்டுப்படுத்த சரியான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படாததால் ஒருவருடன் ஒருவர் முட்டிமோதி தள்ளியவாறு முன்நோக்கி செல்ல பலர் முயன்றனர்.
இந்த தள்ளுமுள்ளில் சிக்கி மிதிபட்டு 15 பேர் உயிரிழந்ததாகவும், சுமார் 40 பேர் காயமடைந்ததாகவும் முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.