தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

வரலாற்றில் முதல் தடவை இலங்கை ரூபாவின் பெறுமதி பாரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளது

இலங்கை மத்திய வங்கியால் இன்று வெளியிடப்பட்டுள்ள நாணய மாற்று பெறுமதிகளின் படி அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி பாரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

அதன்படி  அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 155.26 ரூபாவாகவும் அதன் விற்பனைப் பெறுமதி 159.04 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

வரலாற்றில் முதல் தடவை

இந்நிலையில் இலங்கை ரூபாவின் இந்த வீழ்ச்சி வரலாற்றில் முதல் தடவையாக பதிவாகியுள்ளதாகவும் மத்தியவங்கி குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை இந்த  நாணயமாற்று விகிதம்  எதிர்வரும் நாட்களிலும் தொடராலம் என்றும்  தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...