Designed by Iniyas LTD
வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்திற்கு சென்ற பக்தர்களிடம் வழிப்பறி
வவுனியா, பரந்தன் ஊடாக வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்திற்கு சென்ற பக்தர்களின் வாகனத்தை, மோட்டார் சைக்கிளில் சென்ற குழுவொன்று வழிமறித்து அவர்களின் தங்க நகைகளை அபகரித்து சென்றுள்ளனர்.
இந்நிலையில் கிளிநொச்சி, தர்மபுரம் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் ஜீவராசா ஆகியொர் இணைந்து குறித்த மோட்டார் சைக்கிளில் வந்த குழுவைச் சேர்ந்த இருவரை மடக்கிபிடித்துள்ளனர்.
குறித்த நபர்களை தர்மபுரம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களின் மோட்டார் சைக்கிளும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும்,குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை தர்மபுரம் பொலிஸார் முன்னெடுத்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.