தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

யாழ்  நவாந்துறையில்    மீன்பிடிக்க சென்ற போது  காணாமல் போன மீனவர்கள் கரை திரும்பியுள்ளனர்

யாழ்  நவாந்துறையில்  இருந்து  மீன்பிடிக்க கடலுக்கு சென்ற போது  காணாமல் போன மூன்று மீனவர்களும் இன்று கரை திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவாந்துறை வடக்கைச் சேர்ந்த குறித்த மூன்று மீனவர்களும்  ஒரே படகில் கடந்த சனிக்கிழமை மாலை கடற்றொழிலுக்கு சென்ற நிலையில் காணாமல் போயிருந்தனர்.

அவர்களின் படகில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக நடுக்கடலில் நிர்கதியான நிலையில், மீண்டும் கரை திரும்பியதாக மீனவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை கடற்படையினரின் உதவியுடன்  பொலிஸார்  குறித்த மீனவர்களை  தேடும் பணியை முன்னெடுத்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...