Designed by Iniyas LTD
தாமரை கோபுரத்தில் மரணமான கிளிநொச்சி இளைஞனுக்கு நட்டஈடு.
கடந்த எட்டாம் திகதி தாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து மரணமான கிளிநொச்சி இளைஞனுக்கு முப்பது இலட்சம் ரூபாவினை ஓப்பந்த நிறுவனங்கள் நட்டஈடாக வழங்கியுள்ளன.
தாமரை கோபுரத்தின் கட்டுமானப் பணிகளில் ஈடுப்பட்டிருந்து கிளிநொச்சி அக்கராயன்குளத்தைச ் சேர்ந்த கோணேஸ்வரன் நிதர்சன் எனும் மாணவன் கடந்த எட்டாம் திகதி தாமரை கோபுரத்தின் கட்டுமானப்பணியில் இருந்தபோது மரணமடைந்திருந்தார்.
சீனா மற்றும் இலங்கையை சேர்ந்த இரண்டு ஒப்பந்த நிறுவனங்கள் தாமரை கோபுரத்தின் கட்டுமானப்பணிகளில் ஈடுப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் மரணமான இளைஞனுக்கு குறித்த நிறுவனங்கள் இணைந்து காப்புறுதி பணம் மற்றும் நிறுவன பங்களிப்பு எனபனவாக முப்பது இலட்சம் ரூபாவினை வழங்கியுள்ளனா்
இதேவேளை நிதர்சனின் குடும்பத்தினருக்கு மீள் குடியேறி இதுவரை காலமும் அரசின் நிரந்தர வீட்டுத்திட்டம் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.