தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

படையினரால் விடுவிக்கப்பட்ட காணி தொல்பொருள் திணைக்களத்தினால் அபகரிப்பு!

முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டான் பிரதேசத்திற்குடப்பட ஒட்டுசுட்டான் புதுக்குடியிருப்பு வீதியில் அமைந்துள்ள தனியார் ஒருவருக்கு சொன்தமான உறுதி காணி ஜந்து ஏக்கரில் ஒரு தொகுதியில் பரம்பரை பரம்பரையாக சிவாலயம் ஒன்று காணப்பட்டுள்ளது இந்த சிவாலயம் பஞ்சாங்கத்தில் பதிவாகியுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளார்கள்.
இந்நிலையில் குறித்த சிவாலயத்தில் வழிபாடுகளை மேற்கொள்ள முடியாத நிலையில் படையினர் அங்கு நிலைகொண்டு வாளை மற்றும் மேட்டுநில பயிர்செய்கையிலும் ஈடுபட்டுள்ளதுடன் அங்குள்ள ஒரு அரசமரத்தின் கீழ் புத்தர் சிலை ஒன்றினையும் அத்து மீறி வைத்துள்ளார்கள்.
இது தொடர்பில் காணி உரிமையாளரினால் காணியினை விடுவிக்க கோரி மனிதஉரிமைகள் ஆணைக்குழுவில் முறையிட்டுள்ளார் இன்னிலையில் குறித்த காணியினை படையினர் 25.06.18 அன்று விடுவித்துள்ளார்கள்
இராணுவ உயர் அதிகாரியினால் பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் யு.இந்திரகுமார் அவர்களிடம் ஆவணரீதியாக கையளிக்கப்பட்டுள்ளார்கள்.
இதன்போது குறித்த பகுதியில் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளும் வருகைதந்துள்ளார்கள் அந்த இடத்தில் தொல் பொருள் இருப்பதாக தெரிவித்து தொல்பொருள் திணைக்களத்திற்கும் காணி தொடர்பான விபரங்களை படையினர் கொடுத்துள்ளார்கள்.
இந்த காணியினை பிரதேச செயலகம் ஊடாகவே தொல்பொருள் திணைக்களம் காணி உரிமையாளரிடம் இருந்து பெற்றுக்கொள்ளவேண்டும் இருந்தும் உடனடியாக பிரதேச செயலகத்திடமோ அல்லது காணிக்கு உரித்தானவர்களிடமோ எதுவித அனுமதியும் அற்ற நிலையில் குறித்த உரிமையாளரின் உறுதி;க்காணியில் ஒன்றை கால் ஏக்கர் பகுதியினை தொல்பொருள்திணைக்களம் எல்லைப்படுத்தியுள்ளதுடன் அவர்களின் ஊழியர்களையும் பாதுகாப்பிற்காக நிறுத்தியுள்ளார்கள்.
இந்த நிலையில் அரச காணிச்சட்டத்திற்கு அமைவாக சுவீகரிப்பு செய்யப்படவில்லை என பிரதேச வாசிகள் விசனம்  தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments
Loading...