தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

முல்லைத்தீவு நகரில் பல்வேறு கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய ஏழுபேர் கைது

முல்லைத்தீவு நகரில் பல்வேறு கொள்ளைகளுடன் தொடர்புடைய ஏழுபேர் கைது பெறுமதியான பொருட்கள் மீட்பு!

முல்லைத்தீவு நகர்பகுதியில் கடந்த சில காலங்களாக இடம்பெற்று வந்த வீட்டுக்கொள்ளை மற்றும் வாகனங்கள் உடைத்து கொள்ளையிடல் சம்பவங்கள் தொடர்பில் முல்லைத்தீவு பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

இதற்கமைய கிளிநொச்சி மாவட்ட பொலீஸ் அத்தியட்சகர் மகிந்தகுணரத்தின அவர்களின் ஆலோசனைக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட  தீவிர கண்காணிப்பு மற்றும் விசாரணை நடவடிக்கையின் போது முல்லைத்தீவு கள்ளப்பாட்டுப்பகுதியில் இயங்கிவந்த  07 பேர் கொண்ட கொள்ளைக்கும்பல் ஒன்றினை கைதுசெய்து அவர்களிடம் இருந்து பெறுமதியான பொருட்களையும் மீட்டுள்ளார்கள்.

இதன்போது பெறுமதியான 15 தொலைபேசிகள் அறுபதாயிரம் பெறுமதியான நகைகள் ஏ.ரி.எம் அட்டைகள் இரண்டு என்பன மீட்கப்பட்டு குறித்த நபர்களை முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு பொலீஸார் தெரிவித்துள்ளார்கள்.

முல்லைத்தீவு கள்ளப்பாடு,வண்ணாங்குளம் பகுதியில் கடந்த மாதங்களில் வீடுகள் உடைக்கப்பட்டு 5 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக இரண்டு முறைப்பாடுகள் முல்லைத்தீவு பொலீஸ் நிலையத்திற்கு கிடைக்கப்பெற்றுள்ளது

அத்துடன் வெளிமாவட்டங்களில் இருந்து மீன் கொள்வனவிற்காக வருகைதரும் வாகனங்கள் இரண்டு உடைக்கப்பட்டு வாகனங்களில் உள்ள அதிகளவான பணங்கள் இலத்திரனியல் பொருட்கள்  கொள்ளையிடப்பட்டுள்ளதாகவும் முல்லைத்தீவு பொலீஸ் நிலையத்திற்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது.

இதில் கிளிநொச்சியினை சேர்ந்த கொள்ளையன் ஒருவனின் தலைமையில் 7 பேர்கொண்ட குழு கொள்ளை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக முற்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. முல்லைத்தீவு பகுதியில் பல வீடுகளில் கொள்ளைச்சம்பவங்கள் இடம்பெற்ற போதும் வீட்டின் உரிமையாளர்கள் பொலீஸ் நிலையத்தில் முறையிடப்படவில்லை எனவும் முல்லைத்தீவு பொலீஸார் தெரிவித்துள்ளார்கள்

Comments
Loading...