Designed by Iniyas LTD
இன்றைய இராசிபலன்கள் …
மேக்ஷம்
இன்று இளம் பெண்களுக்கு நல்ல வரன் கிடைத்துத் திருமண வாழ்வு கைகூடும்.மாணவர்கள் ஞாபகத்திறன் சிறந்து உயர்ந்த தேர்ச்சி அடைவர். மற்ற துறை மாணவர்களுக்கும் பாராட்டும், பரிசும் கிடைக்கும். சக மாணவர்களும், ஆசிரியர்களும் தேவையான உதவி புரிவர். படிப்பை முடித்தவர்களுக்கு கெளரவமான வேலைவாய்ப்புக் கிடைக்கும்.
ரிக்ஷபம்
இன்று அரசியல்வாதிகள் கடந்தகால குறைபாடுகளைச் சரிசெய்வீர்கள். ஆதரவாளர்களின் மனதில் நம்பிக்கை உருவாகும். எதிர்பார்த்த பதவி தானாக வந்து சேரும். அதிகாரிகள் உங்கள் கோரிக்கையை கவனமுடன் கேட்டு நிறைவேற்றித்தருவர். எதிரிகள் வியந்து போகிற அளவில் உங்கள் செயல்பாடுகளின் தரம் அமையும்.
மிதுனம்
இன்று உத்தியோகத்தில் துணிச்சலான முடிவுகளை எடுக்க நினைப்பீர்கள். மேலதிகாரிகள் கூறுவதை கேட்டு தடுமாற்றம் அடையலாம். நிதானமாக யோசித்து செய்வது நல்லது. பணவரத்து திருப்தி தரும். குடும்பத்தில் நடைபெறும் சில விஷயங்கள் உங்கள் கோபத்தைத் தூண்டலாம்.’
கடகம்
இன்று வீண் வாக்குவாதங்களில் ஈடுபடாமல் மிகவும் கவனமாகப் பேசுவதன் மூலம் நன்மை உண்டாகும். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உறவினர்கள் மத்தியில் இருந்த பழைய பகைகள் மாறும். எந்தவொரு காரியத்தைச் செய்யும் முன்பும் அதை எப்படி செய்வது? என்ற மனத் தடுமாற்றம் ஏற்பட்டு நீங்கும்.
சிம்மம்
இன்று அவசர முடிவுகளைத் தவிர்ப்பது நன்மை தரும். எதிர்காலம் தொடர்பாகத் திட்டமிடுவீர்கள். சொத்து சம்பந்தமான முக்கிய முடிவுகளை எடுக்க நினைப்பீர்கள். அடுத்தவர் யோசனைகளைக் கேட்டுத் தடுமாற்றம் அடையாமல் இருப்பது நல்லது. எல்லாப் பிரச்சினைகளும் தீரும். எதிர்ப்புகள் அகலும். உங்களது நியாயமான திட்டங்களுக்கு மற்றவர்கள் ஆதரவு அளிப்பார்கள்.
கன்னி
இன்று ஒரு குறிக்கோளை மனதில் வைத்துத் துணிவுடன் செயலாற்றுவீர்கள். எடுக்கும் முடிவில் உறுதியாக இருப்பீர்கள். உங்கள் பேச்சுத் திறமை அதிகரித்து அதனால் பல காரியங்கள் சிறப்பாக நடந்துமுடியும். முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் அவர்களால் உதவி ஆகியவையும் கிடைக்கலாம்.
துலாம்
இன்று நீங்கள் செய்யும் காரியங்களுக்கு உதவுவதற்காக யாராவது ஒருவர் துணை நிற்பார். பகைகள் விலகும். தொழில் வியாபாரம் விரிவாக்கம் செய்ய எடுக்கும் முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். கடன் பிரச்சினைகள் தொல்லை தராது. போட்டிகள் விலகும்.
விருட்சிகம்
இன்று உத்தியோகத்திலிருப்பவர்கள் உயர்ந்த நிலைக்கு வருவார்கள். உழைப்புக்குப் பலன் கிடைக்கும். உங்கள் மீதான மதிப்பு உயரும். குடும்பத்திலிருந்த பிரச்சினைகள், எதிர்ப்புக்கள் தீரும். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் உங்களுக்கு பெருமை உண்டாகும்.
தனுசு
இன்று சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரியங்களை வெற்றிகரமாகச் செய்து முடிப்பீர்கள். கடன் பிரச்சினைகள் கட்டுக்குள்ளிருக்கும். தொழில் தொடர்பாக வீண் அலைச்சல் இருக்கும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். சக கலைஞர்களிடம் நிதானத்தைக் கடைபிடிப்பது நன்மை தரும்.
மகரம்
இன்று கோபத்தைக் குறைத்துத் தன்மையாகப் பேசுவதால் காரிய வெற்றி உண்டாகும். எதிர்பாராத செலவு இருக்கும். அரசியல் துறையினர் தேவையற்ற அலைச்சலைக் குறைத்துக் கொள்வது நல்லது. எல்லாவகையிலும் நன்மை உண்டாகும். மற்றவர்களுக்கு உதவிகள் செய்ய தூண்டும். பிரிந்து சென்றவர்களை மீண்டும் சந்திக்க நேரலாம்.
கும்பம்
இன்று மாணவர்களுக்குக் கல்வியில் வெற்றி பெறவும், மேல்படிப்பு படிக்கவும் எடுக்கும் முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். சொத்துப பிரச்சனை தீரும். குடும்பக் குழப்பம் தீரும். எடுத்த காரியத்தைத் தைரியமாக உறுதியுடன் செயற்படுத்துவீர்கள்.
மீனம்
இன்று வாழ்க்கைக்கு தேவையான புதிய வசதிகள் கிடைக்கும். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். புதிய ஆடை அணிகலன்கள் – ஆடம்பரப் பொருட்கள் சேர்க்கை உண்டு. வீடு, மனை வாங்க திட்டமிடுவீர்கள். சிலர் புதிய வாகனம் வாங்குவார்கள்.