Designed by Iniyas LTD
யாழ் நெடுந்தீவில் நான்கு இந்திய மீனவர்கள் போதைபொருட்களுடன் கைது…
யாழ்.நெடுந்தீவுக் கடற்பரப்பில் நான்கு இந்திய மீனவர்கள் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட மீனவர்களிடமிருந்து 37 கிலோ கஞ்சாப் போதைப் பொருள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைதான நான்கு மீனவர்களையும், சான்றுப் பொருட்களையும் கடற்படையினர் தற்போது காங்கேசன்துறைக்குக் கொண்டு சென்றுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது..
குறித்த மீனவர்களை காங்கேசன்துறைப் பொலிஸாரிடம் கடற்படையினர் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.