Designed by Iniyas LTD
சுதந்திரபுர பகுதியில் அபாயகரமான வெடிபொருட்கள் மீட்பு..
முல்லைத்தீவு சுதந்திரபுர பகுதியில் அபாயகரமான வெடிபொருட்கள் சில இன்று மீட்க்கப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தனியார்ஒருவர் தனது காணிக்குள் இருந்த கிணறு ஒன்று சீரற்று இருந்ததால் அவற்றை அகழ்ந்து சீராக்க நேற்று முயற்சித்துள்ளார்.இதன்போது கிணற்றுக்குள் அபயகரமான வெடிபொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டது.
இதனை தொடர்ந்து சுதந்திரபுரம் மத்தி பகுதியில் நிலைகொண்டிருந்த கடற்படையினரிடம் தகவல் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வடக்கு கடற்படை உயர் அதிகாரி விக்ரம்சிங்க( Rear admiral Wikramsingke) தலைமையில் நேற்றையதினம் அந்தப்பகுதிக்கு சென்ற பொலிஸாரும் கடற்படையின் விசேட இராணுவ அணியினரும் அகழ்வு பணியில் ஈடுபட்டனர்.
இதன்போது விடுதலைப் புலிகளின் தயாரிப்பில் உருவாகிய பசீலன் 2000 ஆட்லறி செல் இரண்டு உள்ளிட்ட இராணுவ வெடிபொருட்கள் சில மீட்க்கப்பட்டுள்ளது.மேலும் இந்த அகழ்வு பணி இன்று பிற்பகல் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளதுடன் இன்று தொடரவுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த அகழ்வுப்பணி நீதிமன்றத்தின் அனுமதியுடன் ஆரம்பமாகியதுடன் சம்பவ இடத்திற்கு நீதிமன்ற பதிவாளர் உள்ளிட்ட அதிகாரிகள் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

