தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

இன்றைய இராசிபலன்கள் ..

மேக்ஷம்

இன்று பயணங்கள் செல்ல நேரலாம். உறவினர்களிடம் வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. காரிய தாமதம் ஏற்பட்டாலும் சாதகமான பலன் கிடைக்கும்.

ரிக்ஷபம்

பணவரத்துக் கூடும். எதிர்ப்புகள் மறையும். பகை பாராட்டியவர்கள் பகையை மறந்து நட்புக் கரம் நீட்டுவார்கள். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் குறையும்.

மிதுனம்

இன்று வாக்குவன்மையால் காரியங்களில் அனுகூலம் ஏற்படும். வாகனம், வீடு ஆகியவற்றால் செலவு ஏற்படும். அடுத்தவர் பிரச்சினைகளில் தலையிடுவதைத் தவிர்ப்பது நல்லது.

கடகம்

இன்று தொழில் வியாபாரம் எதிர்பார்த்த அளவு வேகமாக நடக்காவிட்டாலும் இலாபம் குறையாமலிருக்கும்.  உத்தியோகத்திலிருப்பவர்கள் தடங்கல்கள், கூடுதல் உழைப்பு ஆகியவற்றைச் சந்திக்க வேண்டியிருக்கும்.

சிம்மம்

இன்று குடும்பத்திலிருப்பவர்கள் எதையும் வெளிக்காட்டாமல் உங்களுடன் இன்முகத்துடப பேசுவார்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்த வருத்தங்கள் நீங்கும். அக்கம் பக்கத்தினரிடம் அனுசரித்துச் செல்வது நல்லது.

கன்னி

இன்று சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி கிடைக்கும். மற்றவர் விவகாரங்களில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. சொத்து தொடர்பான விடயங்களில் கவனமாகவிருப்பது நல்லது.

துலாம்

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். பணம் சேரும். மற்றவர்கள் செய்யத் தயங்கும் வேலையை செய்து முடித்துப் பாராட்டுக் கிடைக்கப் பெறுவீர்கள்.

விருட்சிகம்

இன்று ஆன்மிகப் பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். சுக்கிரன் சஞ்சாரம் ராசிக்கு 10இல் இருப்பதால் விரும்பிய பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள்.  தொழில் வியாபாரத்திலிருந்த இடையூறுகள் நீங்கும்.

தனுசு

இன்று எதிர்பார்த்த நிதியுதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றமான பலன் காண்பார்கள். புதிய வேலை பற்றிய சிந்தனை அதிகரிக்கும்.

மகரம்

இன்று கணவன், மனைவிக்கிடையில் இருந்த ஊடல்கள் நீங்கி நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகள் பெருமை சேர்ப்பார்கள். விருந்து, கேளிக்கை நிகழ்ச்சிகளில் குடும்பத்தினருடன் கலந்து கொள்வீர்கள்.

கும்பம்

இன்று வழக்குச் சம்பந்தமான முன்னேற்றம் காண எடுக்கும் முயற்சிகள் கைகூடும். எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். தடை,தாமதம் ஏற்படும். வீண் அலைச்சல் உண்டாகும்.

மீனம்

இன்று மனஉறுதி அதிகரிக்கும். சொத்துக்களை அடைவதில் தடைகள் ஏற்படும். உயர்நிலையில் உள்ளவர்களுடன் மனவருத்தம் ஏற்படும்படியான சூழ்நிலை வரும். உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம், கவனம் தேவை.

 

Comments
Loading...