தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

தமிழீழ இனப்படுகொலை தொடர்பில் இசை அல்பம் தயாரிக்கவுள்ள பிரபல இசையமைப்பாளர்.

இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலை தொடர்பில் இசை அல்பம் ஒன்றை தயாரிக்கவுள்ளதாக பிரபல இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா தெரிவித்துள்ளார்.

இறுதிக்கட்ட போரின் போது கொலை செய்யப்பட்ட உயிர்களை நினைவு கூரும் வகையில் இசை அஞ்சலி செலுத்தவுள்ளதாகவும் அது  தன்   கனவு எனவும் அவர் கூறியுள்ளார்.

இலங்கைத் தமிழர்களின் பிரச்சனை குறித்து விழிப்புணர்வினை தன்னால் ஏற்படுத்த முடியாதென்றும் எனினும்  கடைசி நேரத்தில் அங்கிருந்த மக்களிற்கு  நடந்தது என்ன என்பதை இசை ஆவணமாக வெளிப்படுத்த முடியும் எனவும் யுவன் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த இசை அல்பம் தொடர்பாக  கடந்த மூன்றாண்டுகளாக செயலாற்றி வருவதாகவும்  விரைவில் அதனை  வெளியிடவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்திய  பத்திரிக்கை ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலில் \ யுவன்ஷங்கர் ராஜா  இதனை கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Comments
Loading...