Designed by Iniyas LTD
இன்றைய ராசிபலன்…
மேக்ஷம்
இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். கணவன் மனைவிக்கிடையே இருந்த பிரச்சனைகள் தீரும். பிள்ளைகள் விரும்பும் பொருள்களை வாங்கிக் கொடுத்து அவர்களை மகிழ்ச்சி அடையச் செய்வீர்கள்.
ரிக்ஷபம்
இன்று இழுபறியாகவிருந்த வேலைகள் சாதகமாக நடந்து முடியும். மனம் மகிழும்படியான சம்பவங்கள் நடக்கும். மிகவும் அனுகூலமான நாள். வாய்ப்புகள் குவியும்.
மிதுனம்
இன்று இனிமையான செய்திகள் தேடி வரும். நீண்ட நாளாக எதிர்பார்த்த உதவி கிடைக்கப் பெறுவீர்கள். புதிய நண்பர்களால் தேவையில்லாத பிரச்சனைகள் உண்டாகும் வாய்ப்புகள் இருப்பதால் கவனமுடன் இருப்பது நல்லது.
கடகம்
இன்று மாணவர்கள் சகமாணவர்களை அனுசரித்துச் செல்வது நன்மை தரும். கல்வியில் ஆர்வம் உண்டாகும். பணகஷ்டம் தீரும். கல்வியில் வெற்றி உண்டாகும்.எல்லா வசதிகளும் உண்டாகும்.
சிம்மம்
இன்று தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. நண்பர்கள், உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். தந்தையுடன் மனஸ்தாபம் ஏற்படலாம். எதிர்பாராத காரிய தடைகள் வரும்.
கன்னி
இன்று தொழில் வியாபாரத்தில் சுமாரான போக்கு காணப்படும். புதிய ஆர்டர்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நம்பிக்கையுடன் செயலாற்றுவதன் மூலம் நன்மை அடைவார்கள்.
துலாம்
இன்று குடும்பத்தினருக்குத் தேவையான பொருள்களை வாங்குவீர்கள். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை காணப்படும். பிள்ளைகளின் கல்வி அவர்களது செயல்களில் கவனம் செலுத்துவீர்கள்.
விருட்சிகம்
இன்று எதிலும் எதிர்பாராத தடைகள் உண்டாகலாம். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு காரிய வெற்றி அடைவீர்கள். நீண்டநாட்களாக இருந்த மன அழுத்தம் நீங்கும்படியான சூழல் உருவாகும். உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு இருக்கும்.
தனுசு
இன்று மனம் மகிழும்படியான சூழ்நிலை உருவாகும். வெளியூர் செல்ல நேரிடும். பணிகள் மிக துரிதமாக நடப்பதற்கான சூழல் உருவாகும்.
மகரம்
இன்று கஷ்டங்கள் குறையும். கடும் முயற்சிக்குப் பிறகு நீங்கள் எடுக்கும் காரியம் வெற்றி பெறும். வீண் வழக்குகள் வரலாம். உஷ்ண சம்பந்தமான நோய் உண்டாகலாம் கவனம் தேவை.
கும்பம்
இன்று எதிர்பாலினத்தாரிடம் பழகும் போது கவனம் தேவை. விருப்பத்திற்கு மாறான சம்பவங்கள் நடக்கலாம். தொழில் தொழில் வியாபாரத்தில் குறிப்பாக கூட்டு தொழிலில் ஈடுபட்டு இருப்பவர்கள் எச்சரிக்கையாக செயல்படுவது நல்லது.
மீனம்
இன்று உத்தியோகத்திலிருப்பவர்கள் அதிகமாக உழைக்க வேண்டி இருக்கும். முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்கள் கவனமாக இருப்பது நல்லது. குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் மறையும்.