தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளி கைது..

முல்லைத்தீவு ஒட்டிசுட்டானில் விடுதலைப்புலிகளின் சீருடைகள் மற்றும் வெடிபொருட்கள் கைபற்றப்பட்டமை தொடர்பில் புனவாழ்வளைக்கப்பட்ட முன்னாள் போராளி ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

கிளிநொச்சி சாந்தபுரம் பகுதியை சேர்ந்த 3 பிள்ளகளின் தந்தையே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிகப்பட்டுள்ளது.

இதேவேளை கடந்த ஜூன் மாதம் ஒட்டிசுட்டாம் பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்றை சோதனை செய்தபோது அதில் விடுதலைப்புலிகளின் சீருடைகள் மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டிருந்தமை நினைவில்கொள்ளத்தக்கது.

குறித்த சம்பவம் தொடர்பிலேயே முன்னாள் போராளி கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...