தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

பாகிஸ்தானில் அதிரடி காட்டும் இம்ரான் கான் ….

பாகிஸ்தான் அதிபர், பிரதமர் உள்ளிட்டோரின் முதல் வகுப்பு விமானப் பயணம் உள்ளிட்ட சலுகைகளுக்கு அந்நாட்டு அரசு தடைவிதித்துள்ளது.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தலைமையில் நேற்று அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.

இதன்போது  அதிபர், பிரதமர், தலைமை நீதிபதி, ராணுவத் தளபதி, சபாநாயகர் உள்ளிட்டோரின் முதல் வகுப்பு விமானப் பயணத்துக்கு தடை விதிக்க ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில் இன்று முதல் அந்த தடை அமுலாக உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதனையடுத்து  பிஸ்னஸ் மற்றும் பொது வகுப்புகளில் பயணம் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிபர், பிரதமர்,உட்பட அனைவருக்கும்ஆடம்பரச் செலவுகளுக்கான நிதி ஒதுக்கீடுகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் வெளிநாட்டு சுற்றுப் பயணத்தின் போது தனி விமானம் பயன்படுத்துவதற்கு தடைவிதிக்க பிரதமர் இம்ரான்கான் முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதேவேளை பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்றதிலிருந்து இம்ரன்கான்  அதிரடி காட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது .

Comments
Loading...