Designed by Iniyas LTD
வவுனியாவில் வீடொன்றின்மீது தாக்குதல் – மதுபோதையில் சென்ற இளைஞர்கள் அட்டகாசம்.
மதுபோதையில்- இரும்பு கம்பிகளுடன் வீடொன்றுக்குள் புகுந்த மூன்று பேரைக் கொண்ட இளைஞர் குழு , வீட்டின் மீது கற்களை எறிந்து தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் வவுனியா சாந்தசோலைப் பகுதியில் நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது.
இந்த தாக்குதலில் குடும்பத்தலைவர் மற்றும் கர்ப்பவதியாக அவரது மனைவி, இரண்டு குழந்தைகள் உட்பட ஐந்து பேர் செய்வதறியாது தவித்ததுடன், வீட்டின் கதவை மூடிவிட்டு உள்ளேயே இருந்துள்ளனர்.
அதன்பின் பொலிஸாருக்குத் தகவல் வழனியதை அடுத்து குறித்த இளைஞர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.
கொடுக்கல் வாங்கல் பிரச்சினை காரணமாகக் இச் சம்பவம் இடம்பெற்றதாக வீட்டின் உரிமையாளர் தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றதாக தெரிவிகப்பட்டுள்ளது..