Designed by Iniyas LTD
கொடிகாமத்தில் பொலிஸாரின் வாகனத்தைக் கடத்திய நால்வர் கைது…
யாழ்.கொடிகாமத்தில் ஆயுதங்களுடன் பொலிஸாரின் வாகனத்தைக் கடத்திச் சென்ற சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
நேற்றைய தினம் மணல் கடத்தல் இடம்பெறுவதாக கொடிகாமம் பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து அங்கு சென்ற பொலிஸார் மீது தாக்குதல் நடத்தி விட்டு சிலர் வாகனத்தைக் கடத்திச் சென்றிருந்தனர்.
இதனையடுத்து யாழ்ப்பாணத்தின் ஏனைய பொலிஸ் நிலையங்களிருந்தும் தென்மராட்சிப் பகுதிக்குப் பொலிஸார் வரவழைக்கப்பட்டுத் தீவிர தேடுதல் நடத்தப்பட்டிருந்தது.
தேடுதலின்போது கடத்தல் இடம்பெற்ற பகுதியிலிருந்து சுமார் 500 மீற்றர் தூரத்திலிருந்து பொலிசாரின் வாகனம் மீட்கப்பட்டிருந்தது.
இதனை அடுத்து வாகனத்தைக் கடத்திய சந்தேகநபர்களைப் பொலிஸார் வலைவிரித்துத் தேடி வந்த நிலையிலேயே சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் உட்பட நால்வர் இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.