தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

யாழ் மாநகர உறுப்பினருக்கு எதிராக வழக்கு…

யாழ் மாநகர சபையின் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் ஒருவருக்கு எதிராக  வழக்கு தாக்கல் செய்யப்பட உள்ளது.

கடந்த வியாழக்கிழமை சுகாதார துறையினர்  யாழ் மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில்  டெங்கு நுளம்பு பெருகும் இடங்களை கட்டுப்படுத்துவதற்காக நடவடிக்கை மேற்கொண்டிருந்தனர்.

இதன் போது  கலிமா வீதியில் தற்காலிகமாக வரும்   குறித்த மாநகர சபை உறுப்பினர்  எம்.எம்.எம் நிபாஹிரின் வீட்டிற்கு  அருகில் டெங்கு பரவும் வகையில் சூழலை வைத்திருந்ததை கண்டித்திருந்தனர்.

இந்த நிலையில் குறித்த    மாநகர சபை உறுப்பினர் அதிகாரிகளை கடமையை செய்யவிடாது  தடுத்துள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.

அவ்வேளையில்  அதிகாரிகளுடன் சென்ற  பொலிஸ் உத்தியொகத்தர்கள் உடனடியாக தலையிட்டு  மாநகர சபை உறுப்பினரை எச்சரித்ததுடன் வழக்கு தாக்கல் செய்ய அதிகாரிகளை பணித்துள்ளனர்.

இதே வேளை   யாழ்ப்பாண மாநகர சபை தேர்தலில் 10 ஆம் வட்டார  வேட்பாளராக போட்டியிடும் போது  குறித்த உருப்பினர் புத்தளத்தில் நிரந்திர வதிவிடத்தை கொண்டிருந்தார்  என்கின்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...