Designed by Iniyas LTD
ஐ.நா. பொதுச் செயலாளார் இந்தியாவிற்கு விஜயம்…
ஐ.நா. பொதுச் செயலாளார் அண்டோனியோ கட்டரெஸ் ((Antonio Guterres)) இந்தியா விஜயம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் அக்டோபர் 1-ஆம் தேதி அங்கு செல்லும் அவர், டெல்லியில் ஐ.நா.வின் புதிய அலுவலகத்தைத் தொடங்கிவைக்க இருப்பதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.
இத்தகவலை அவரது செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
அதோடு அக்டோபர் 2-ஆம் தேதி மகாத்மா காந்தி சர்வதேச சுகாதார மாநாட்டின் நிறைவு நிகழ்ச்சியில் பங்கேற்கும் அவர்,
அக்டோபர் 3-ஆம் தேதி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தையும், பிரதமர் மோடியையும் சந்திக்க உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் அவர் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஆகியோரையும் சந்திக்க உள்ளார்.
இதேவேளை சர்வதேச சூரியசக்திக் கூட்டத்தின் முதல் கூட்டத்திலும் பங்கேற்க உள்ள ஐ.நா. பொதுச்செயலாளர் அமிர்தசரஸ் பொற்கோவிலுக்கு செல்ல இருப்பதாகவும் மேலும் தெரிவிக்கபப்ட்டுள்ளது..