கிளியில் இராணுவ ஆட்சியே நிலவுகிறது!

கிளி­நொச்சி மாவட்­டத்தில் இரா­ணுவ ஆட்­சியே நில­வு­கின்­றது. எங்கும், எதிலும் இரா­ணு­வத்தின் தலை­யீடு தான் உள்ளது. நல்­லாட்சி நில­வு­வ­தா­கவும் ஜன­நா­யக ஆட்சி நில­வு­வ­தா­கவும் குறிப்­பி­டு­கின்­றனர் ஆனால் இங்கு அவ்­வாறு எதுவும் இல்லை என பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சிவ­ஞானம் சிறி­தரன் தெரி­வித்­துள்ளார். கடந்த சனிக்­கி­ழமை கிளி­நொச்சி மாவட்ட அபி­வி­ருத்தி ஒருங்­கி­ணைப்புக் குழு கூட்­டத்­திற்கு இணைத்­த­லைமை தாங்கி கருத்து தெரி­விக்கும் போதே அவர் இவ்­வாறு குறிப்­பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரி­விக்­கையில்,

கிளி­நொச்­சியில் சிவில் நிர்­வா­கத்தில் இரா­ணுவத்தினரின் தலை­யீடு உள்­ளது, முன்­பள்­ளி­களை இரா­ணு­வத்­தினர் நடத்­து­கின்­றனர், விவ­சாயம் செய்­கின்­றனர், வியா­பாரம் செய்­கின்­றனர், மக்­களின் காணி­களை ஆக்­கி­ர­மித்து வைத்­துள்­ளனர், எம் மக்­க­ளுக்­கு­ரிய வயல் நிலங்­களை அபகரித்து அவர்களின் நிலங்களை அவர்களுக்கே குத்தகைக்கு கொடுத்து பணத்தை எடுக்கின்றனர். பாட­சா­லை­களின் அருகில் இரா­ணுவ முகாம்கள் உள்­ளன. இவ்­வாறு எல்லா விட­யங்­க­ளிலும் இரா­ணு­வத்தின் தலை­யீடு அதி­க­ரித்துக் காணப்­ப­டு­கி­றது. எனவேதான் இந்த மாவட்டத்தில் சிவில் நிர்வாகத்திற்கு பதிலாக இராணுவ ஆட்சியே நடைபெறுகின்றது என்றார்.

இராணுவ ஆட்சிகிளிநொச்சிநல்லாட்சிஸ்ரீதரன்
Comments (0)
Add Comment