கூட்டமைப்பினை சந்திக்கிறார் சுஷ்மா சுவராஜ்!

உத்­தி­யோ­க­பூர்வ விஜயம் ஒன்றை மேற்­கொண்டு நேற்று இலங்­கைக்குவருகை தந்த இந்­திய வெளி­வி­வ­காரஅமைச்சர் சுஷ்மா சுவராஜ் இன்று சனிக்­கி­ழமை ஸ்ரீலங்கா ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுடன் இரு­த­ரப்பு சந்­திப்­புக்­களை நடத்­த­வுள்ளார். அத்­துடன் எதிர்க்­கட்சித் தலை­வரும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்தன் தலை­மை­யி­லான பிர­தி­நி­தி­க­ளையும் சுஷ்மா சுவராஜ் இன்­றைய தினம் சந்­தித்து பேச்சு நடத்­த­வுள் ளார்.

நேற்று இலங்கை வந்­த­டைந்த இந்­திய வெளி­வி­வ­கார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் முதலில் பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்­க­வுடன் அலரி மாளி­கையில் இரு­த­ரப்பு சந்­திப்பை நடத்­தினார். அத்­துடன் தாஜ் சமுத்ரா ஹோட்­டலில் நடை­பெற்ற இலங்கை – இந்­திய நாடு­க­ளுக்கு இடை­யி­லான கூட்டு ஆணைக்­கு­ழுவின் 9 ஆவது அமர்­விலும் சுஷ்மா சுவராஜ் கலந்­து­கொண்டார்.

பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்­க­வுக்கும் இந்­திய வெளி­வி­வ­கார அமைச்சர் சுஷ்மா சுவ­ரா­ஜுக்கும் இடையில் நடை­பெற்ற இரு­த­ரப்பு சந்­திப்­பின்­போது பல்­வேறு விட­யங்கள் குறித்து கலந்­து­யைா­டப்­பட்­டுள்­ளது.

இந்­தி­யா­வுக்கும் இலங்­கைக்கும் இடை­யி­லான இரு­த­ரப்பு உறவை மேலும் வலுப்­ப­டுத்­துதல் பொரு­ளா­தார தொடர்­பு­களை விரி­வு­ப­டுத்­துதல் உள்­ளிட்ட பல்­வேறு விட­யங்கள் தொடர்­பாக பேச்­சு­வார்த்தை நடத்­தப்­பட்­டுள்­ளது.

குறிப்­பாக தமிழ் மக்­களின் இனப்­பி­ரச்­சி­னைக்­கான நிரந்­தர அர­சியல் தீர்வை தொடர்­பாக விரி­வாக கலந்­து­ரை­யா­டப்­பட்­ட­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. குறிப்­பாக இனப்­பி­ரச்­சி­னைக்கு அர­சியல் தீர்வு காண்­பது தொடர்­பா­கவும் அதில் இந்­தி­யாவின் வகி­பாகம் குறித்தும் புதிய அர­சி­ய­ல­மைப்பு தொடர்­பா­கவும் பேச்­சு­வார்த்தை நடத்­தப்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. அத்­துடன் இரண்டு நாடு­க­ளுக்கு இடையில் தொடர்ந்­து­கொண்­டி­ருக்கும் மீனவர் பிரச்­சினை குறித்தும் விரி­வான பேச்­சு­வார்த்­தைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன.

மேலும் இலங்­கைக்கும் இந்­தி­யா­வுக்கும் இடையில் செய்­து­கொள்­ள­வுள்­ள­தாகக் கூறப்­படும் பொரு­ளா­தார தொழில்­நுட்ப உறவு குறித்தும் பேச்­சு­வார்த்தை நடத்­தப்­பட்­டுள்­ள­தாக கூறப்­ப­டு­கின்­றது.

இதே­வேளை பொரு­ளா­தாரம் வர்த்­தகம் மற்றும் இரு நாட்டு பல் துறைசார் உற­வு­களை வலுப்­ப­டுத்தும் நோக்கில் இலங்கை – இந்­திய நாடு­க­ளுக்கு இடை­யி­லான கூட்டு ஆணைக்­கு­ழுவின் 9 ஆவது அமர்வு கொழும்பில் நேற்று வௌ்ளிக்­கி­ழமை நடை­பெற்­றது.

வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீ­ரவின் தலை­மையில் நடை­பெற்ற இந்த இந்த கூட்டு ஆணைக்­குழு அமர்­வின்­போது இரண்டு நாடு­க­ளுக்கு இடை­யி­லான பொரு­ளா­தாரம் சுற்­று­லாத்­துறை சக்தி வளத்­துறை தொழில்­நுட்பம் கடல்­மார்க்க பாது­காப்பு கூட்­டு­றவு சமூகம் கலா­சாரம் பாது­காப்பு ஒத்­து­ழைப்பு மக்கள் மக்கள் தொடர்பு உள்­ளிட்ட பல்­வேறு விட­யங்கள் குறித்து விரி­வாக கலந்­து­ரை­யா­டப்­பட்­டுள்­ளது.

மேலும் மட்­டக்­க­ளப்பு போதனா வைத்­தி­யா­லையில் மருத்­துவ உப­க­ரண பிரிவு நிர்­மா­ணத்­துக்­கான புரிந்­து­ணர்வு உடன்­ப­டிக்­கையும் இதன்­போது கைச்­சாத்­தி­டப்­பட்­டுள்­ளது.

இது இவ்­வாறு இருக்க எதிர்க் கட்சி தலைவர் இரா.சம்­பந்தன் உள்­ளிட்ட தமிழ் தேசிய கூட்­ட­மைப்­பி­ன­ரையும் இந்­திய வெளி­வி­வ­கார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் இன்று சந்­தித்­தித்துப் பேச்சு நடத்­த­வுள்ளார். இதன்­போது அர­சியல் தீர்வு விவ­காரம் புதிய அர­சி­ய­ல­மைப்பு செயற்­பா­டுகள் உள்­ளிட்ட பல்­வேறு விட­யங்கள் குறித்து பேச்­சு­வார்த்தை நடத்­தப்­ப­ட­வுள்­ளது.

ஏற்­க­னவே இலங்­கையின் இனப்­பி­ரச்­சினைத் தீர்வு விட­யத்தில் இந்­தியா முழு­மை­யாக எம்­முடன் இருக்­க­வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு நேற்று முன்­தினம் தெரி­வித்­தி­ருந்­தது. குறிப்­பாக இனப்­பி­ரச்­சினை தீர்வு விவ­காரம் மற்றும் இலங்கை கடற்­ப­ரப்­பிற்குள் அத்­து­மீறும் இந்­திய மீன­வரின் பிரச்­சி­னைக்குத் தீர்வு காணப்­ப­ட­வேண்டும் என்­பன தொடர்பில் இந்­திய வெளி­வி­வ­கார அமைச்சர் சுஸ்மா சுவ­ரா­ஜிடம் வலி­யு­றுத்­துவோம் என இலங்கை தமி­ழ­ரசுக் கட்­சியின் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான மாவை சோ.சேனா­தி­ராஜா நேற்று முன்­தினம் கூறி­யி­ருந்தார்.

அந்­த­வ­கையில் இன்று சுஷ்மா சுவ­ரா­ஜுக்கும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பிர­தி­நி­தி­க­ளுக்கும் இடையில் இன்று நடை­பெ­ற­வுள்ள சந்­திப்பு முக்­கி­யத்­து­வ­மிக்­க­தாக அமையும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

இதே­வேளை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கும் இந்­திய வெ ளியு­றவு அமைச்­ச­ருக்கும் இடையில் இன்று நடை­பெ­ற­வுள்ள பேச்­சு­வார்த்­தையும் முக்­கி­யத்­து­வ­மிக்­க­தாக அமைந்­துள்­ளது. குறிப்­பாக புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்கம் மற்றும் தமிழ் பேசும் மக்­க­ளுக்­கான அர­சியல் தீர்வு விவ­காரம் என்­பன தொடர்பில் இதன்­போது விரி­வாக ஆரா­யப்­படும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

இரண்டு நாடு­க­ளுக்கு இடை­யி­லான பொரு­ளா­தார மற்றும் வர்த்­தக உறவை வலுப்­ப­டுத்­து­வது தொடர்­பா­கவும் இரு­த­ரப்பு உறவை அடுத்தக் கட்­டத்­துக்கு கொண்­டு­செல்­வது குறித்தும் இதன்­போது ஆரா­யப்­படும் என தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

இந்த சந்­திப்­பு­களின் பின்னர் யாழ்பாணத்திற்கான விஜயத்தை மேற்கொள்ளவிருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் அங்கு வடமாகாண முதலமைச்சரை சந்திப்பதற்கும, இந்திய நிதிவுதவியின் கீழ் வடக்கில் முன்னெடுக்கப்படும் வீட்டு திட்டங்கள் உள்ளிட்ட இந்திய அபிவிருத்தி திட்டங்களை நேரடியாக சென்று பார்வையிடவும் திட்டமிடப்பட்டிருந்தது.

எனினும் இறுதி நேரத்தில் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜின் யாழ்ப்பாணத்திற்கான விஜயம் இரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று சனிக்கிழமை மாலை இந்திய வெளியுறவு அமைச்சர் நாடு திரும்பவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கூட்டமைப்பினைசந்திக்கிறார்சுவராஜ்சுஷ்மா
Comments (0)
Add Comment