புலம்பெயர் மக்களின் கருத்துக்கள் தேவையில்லையாம்!

நீண்­ட­கால இனப்­பி­ரச்­சி­னைக்கு அர­சி­ய­ல­மைப்பு மீள் உரு­வாக்கம் மூல­மா­கவே நிரந்­த­ரத்­தீர்வை பெற்­றுக்­கொள்ள முடியும் என்ற நிலைப்­பாட்டில் அர­சாங்கம் உறு­தி­யாக உள்­ளது. ஆனால், வென்­றெ­டுத்த ஜன­நா­ய­கத்தை சீர்­கு­லைக்கும் வகையில் எந்த முயற்­சி­களை எடுக்­கவும் நாம் தயா­ராக இல்லை என ஸ்ரீலங்கா அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க தெரி­வித்தார்.

அர­சி­ய­ல­மைப்பு திருத்த யோச­னையில் நாட்டு மக்­களின் கருத்­து­களை பெற்று அதற்­க­மைய மாற்றம் ஒன்றை ஏற்­ப­டுத்த வேண்டும். ஆனால், புலம்­பெயர் அமைப்­பு­களின் கருத்­து­க­ளுக்கோ அல்­லது தடை­செய்­யப்­பட்ட  தனி நபர் எவ­ரது கருத்­துக்­க­ளுக்கும் இட­மில்லை எனவும் அவர் குறிப்­பிட்டார்.

அர­சியல் அமைப்பு திருத்தம் தொடர்பில் அர­சாங்கம் ஆலோ­சித்து வரும் நிலையில் இந்த அர­சி­ய­ல­மைப்பு திருத்­தத்தின் போது புலம்­பெ­யர்ந்­தோரின் கருத்­துக்­களை பெற­வேண்டும் என அர­சி­ய­ல­மைப்பு திருத்தம் தொடர்பில் மக்கள் கருத்தை அறியும் நிபு­ணர்­குழு தெரி­வித்­துள்ள நிலையில் அது தொடர்பில் வின­விய போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறு­கையில்,

இப்­போ­தைய நிலையில் நாட்டில் பல்­வேறு மாற்­றங்­களை அர­சாங்கம் மேற்­கொண்டு வரு­கின்­றது. வடக்கு, கிழக்கு பகு­தி­களில் பொது­மக்­களின் காணி­களை விடு­வித்­துள்ளோம், வடக்கில் இரா­ணுவ குறைப்­பினை மேற்­கொண்­டுள்ளோம். எனினும் இந்த மாற்­றங்­களை விடவும் அர­சி­ய­ல­மைப்பு திருத்தம் ஒன்றை மேற்­கொள்­வது மிகவும் அவ­சி­ய­மான ஒன்­றாக அமையும். அதா­வது நீண்­ட­கால இனப்­பி­ரச்­சினை தொடர்பில் தமிழ் மக்கள் குர­லெ­ழுப்பி வரு­கின்­றனர். கடந்த காலத்தில் அர­சாங்கம் இனப்­பி­ரச்­சினை தொடர்பில் ஸ்திர­மான நிலைப்­பாட்டை எட்­ட­வில்லை. யுத்­தத்தை முடி­வுக்கு கொண்­டு­வந்த போதிலும் நாட்டில் நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்தும் எந்­த­வொரு வேலைத்­திட்­டத்­தையும் முன்­னெ­டுக்­க­வில்லை.

எனினும் ஆட்­சி­மாற்றம் இன்று நாட்டு மக்­க­ளுக்கு நல்­ல­தொரு நம்­பிக்­கையை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. இலங்­கையர் எனற உணர்வு இன்று மக்கள் மத்­தியில் பல­மாக ஏற்­பட்­டுள்­ளது. தமிழ் சிங்­கள மக்கள் மத்­தியில் நல்ல ஒற்­றுமை உள்­ளது என்­பது வெளிப்­பட்­டுள்­ளது. அவ்­வா­றான நிலையில் நாட்டில் தேசிய ஒற்­று­மையை பலப்­ப­டுத்தும் வகையில் அர­சியல் அமைப்பு திருத்தம் ஒன்றை உரு­வாக்­கு­வது சாத­க­மாக அமையும்.

எனினும் இந்த அர­சியல் அமைப்பு திருத்தம் எந்த வகை­யிலும் நாட்டை பிள­வு­ப­டுத்­தாத வகை­யிலும், மீண்­டு­மொரு குழப்பம் ஏற்­ப­டுத்­தாத ரீயி­திலும் இருக்­க­வேண்டும். குறிப்­பாக பெளத்த சிங்­கள கொள்­கைக்கு முர­ணா­காத வகை­யிலும் அமைய வேண்டும் என்­பதில் அர­சாங்கம் தெளி­வாக உள்­ளது. வென்­றெ­டுத்த ஜன­நா­ய­கத்தை சீர்­கு­லைக்கும் வகையில் எந்த முயற்­சி­களை எடுக்­கவும் நாம் தயா­ராக இல்லை.

யுத்த காலத்தில் நாட்டை விட்டு வெளி­யே­றிய இலங்­கை­யர்கள் தொடர்­பிலும் அவர்­களை மீள் வருகை குறித்தும் அர­சாங்கம் கவனம் செலுத்தி வரு­கின்­றது. ஆனால் சர்­வ­தேச ரீதியில் இன்றும் பல­மாக செயற்­பட்­டு­வரும் விடு­த­லைப்­பு­லிகள் அமைப்­பு­களும் இந்த பட்­டி­யலில் உள்­ள­மை­யினால் அவர்கள் தொடர்பில் கூடிய கவ­னத்­துடன் செயற்­ப­ட­வேண்­டிய தேவையும் உள்­ளது. அதேபோல் அர­சி­ய­ல­மைப்பு திருத்த யோச­னையில் நாட்டு மக்­களின் கருத்­து­களை பெற்று அதற்­க­மைய மாற்றம் ஒன்றை ஏற்­ப­டுத்த வேண்டும். ஆனால் புலம்­பெயர் அமைப்புகளின் கருத்துகளுக்கோ அல்லது தடைசெய்யப்பட்ட தனிநபர்கள் எவரது கருத்துக்களுக்குமோ முன்னுரிமை கொடுக்கப்படாது. இலங்கைக்கான ஒரு அரசியலமைப்பு திருத்தத்தில் பிரிவினைக்கு எந்த சந்தர்ப்பத்திலும் இடமளிக்கப்போவதில்லை. அதேபோல் புலம்பெயர் அமைப்புகளின் கருத்துக்களும் இடமில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துக்கள்தேவையில்லையாம்புலம்பெயர்மக்களின்
Comments (0)
Add Comment