வடக்கு – கிழக்கை இணைத்து தமிழர்களுக்கு கொடுக்க அமெரிக்கா சதி! உதய கம்­மன்­பில

வடக்­கு-­–கி­ழக்­குக்­குக் கூட்­டாட்­சித் தீர்­வைக் கொடுப்­ப­தில் குறி­யாக உள்­ளது அமெ­ரிக்கா. இதற்­கா­கத் திட்­ட­மிட்ட அடிப்­ப­டை­யில் இங்கு பொரு­ளா­தார நெருக்­க­டியை ஏற்­ப­டுத்தி வரு­கின்­றது என்று நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் உதய கம்­மன்­பில குற்­றம்­சாட்­டி­யுள்­ளார்.
”தங்­க­ளின் திட்­டத்தை நிறை­வேற்­று­வ­தற்­காக இங்கு செயற்­கை­யான பொரு­ளா­தார வீழ்ச்சி ஏற்­ப­டு­வ­தைச் சில நாடு­கள் விரும்­பு­கின்­றன. அந்த நாடு­களே சதி செய்து பொரு­ளா­தார நெருக்­க­டியை ஏற்­ப­டுத்­து­கின்­றன” என்­றும் அவர் குறிப்­பிட்­டார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:
பன்னாட்டு நெருக்­க­டி­கள் இருந்­த­போ­தி­லும்,மகிந்த பொரு­ளா­தா­ரத்தை நல்ல நிலை­யில் தக்க வைத்­தி­ருந்­தார். ஆனால், பொரு­ளா­தார நிபு­ணர்­கள் என்று தங்­களை அழைத்­துக்­கொள்­ளும் இந்த ஆட்­சி­யா­ளர்­கள் பொருளாதாரத்தைச் சீரழித்துÂ Øïகொண்டு வருகின்றனர்.
இதன் வீழ்ச்சியை இன்று கிராம மக்களும் உணரத் தொடங்கிவிட்டனர். சர்வதேச நாடுகள் இங்கு நினைத்ததைச் சாதிப்பதற்குப் பொருளாதார வீழ்ச்சியைத் திட்டமிட்டு ஏற்படுத்துகின்றன. சீனா அடி மாட்டு விலைக்கு  அம்பாந்தோட்டைத் துறைமுகத்தை வாங்க வேண்டுமென்றால் இங்கு பொருளாதார நெருக்கடி இருக்கவேண்டும்.
அதேபோல்,திருகோணமலைத் துறைமுகத்தை இந்தியா வாங்க வேண்டுமென்றாலும் பொருளாதார நெருக்கடி இருக்க வேண்டும். அமெரிக்காவின் விருப்பத்தின்படி வடக்கு-கிழக்குக்கு கூட்டாட்சித் தீர்வைக் கொடுக்க வேண்டுமென்றாலும் இங்கு பொருளாதார நெருக்கடி இருக்கவேண்டும்.
ஆகவே,இந்த நாடுகள் தங்களின் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக இங்கு பொருளாதார வீழ்ச்சி ஏற்படுவதை விரும்புகின்றன.அந்த நாடுகளே சதி செய்து பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்துகின்றன.
வடக்கு-கிழக்குக்குக் கூட்டாட்சித் தீர்வை வழங்கவேண்டும் என்பதில் அமெரிக்கா குறியாக உள்ளது. அந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு அந்த நாடு இங்கு செயற்கையான முறையில் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. பொருளாதார நெருக்கடியில் இருந்து தப்புவதற்காக அமெரிக்காவின் நிபந்தனைக்கு இந்த நாட்டு மக்களை இணங்கச் செய்வதன் ஊடாகக் கூட்டாட்சியை இலகுவாக நிறைவேற்றிவிட முடியும்.
இவ்வாறான பன்னாட்டுச் சதிகளுக்குள் எமது நாடு இன்று சிக்கித் தவிக்கின்றது. சர்வதேசத்துடன் நல்லுறவைப் பேணுகின்றோம் என்ற போர்வையில் இந்தச் சதிகளுக்கு இந்த அரசு இடங்கொடுத்து வருகின்றது. இது எதிர்காலத்தில் பெரும் சிக்கலை எமக்கு ஏற்படுத்தப் போகின்றது-என்றார்.
அமெரிக்காஈழம்உதய கம்­மன்­பிலசதிதமிழர்கள்
Comments (0)
Add Comment